FIFA World Cup 2022: அனல் பறக்க காத்திருக்கும் கால்பந்து உலகக் கோப்பை.. எந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு..?
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டுக்கான உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கவுள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

உலகக் கோப்பை போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் பல நாள் கனவை நிறைவேற்ற களத்தில் விளையாடும் இரு அணியின் 22 வீரர்களும் வெற்றியை உயிராய் கருதி விளையாடுவர். இப்படியாக பரபரப்பாக உள்ள இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது.
மொத்தம் 32 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, 29 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றன. போட்டிகள் இன்னும் ஐந்து நாட்களில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டாலும், இந்த முறை கோப்பையை வெல்லும் அணி என ஒரு சில அணிகள் மீதே நம் எதிர்பார்ப்பு இருக்கும். அதன்படி, உலக அளவில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள வீரர்களான நெய்மர் மற்றும் வினிசெஸ் ஜூனியர் உள்ளனர். 2002 ஆண்டுக்குப் பிறகு இந்த அணி உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பெல்ஜியம் அணி :
பெல்ஜியம் அணியின் கேப்டனாக உள்ள கெவின் டி புருயோனி அணிக்கு பெரும் நம்பிக்கையாக உள்ளார். உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜெண்டினா அணி:
அர்ஜெண்டினா அணியைப் பொறுத்தவரையில் அதனை ஒரு அன் லக்கி அணி என்றுதான் குறிப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக அந்த அணி சந்தித்து வரும் ஏமாற்றங்கள், கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்க அணியைப் போல் கால்பந்தில் அர்ஜெண்டினா அணி உள்ளது.
ஃப்ரான்ஸ் அணி:
ஃப்ரான்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் ஒருசில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. உலக அளவில் இந்த அணி நான்காவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி:
உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் அணி என எதிர்பார்க்கப்படும் அணிகளின் பட்டியலில் உள்ளது. இந்த அணி இம்முறை கோப்பையை வென்றால் உலகக் கோப்பையை கிரிக்கெட் மற்றும் கால்பந்து என அடுத்தடுத்து வென்ற நாடு என தனிச்சிறப்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு படைக்கவுள்ள வீரர்கள்
மெஸ்ஸி - அர்ஜெண்டினா
கிரிஸ்டியான ரொனால்டோ - போர்ச்சுகல்
கியாலின் மபாபி - ஃபிரான்ஸ்
கெவின் டி பிருயுனி - பெல்ஜியம்
நெய்மர் - பிரேசில்
லைவ் டெலிகாஸ்ட்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலககோப்பை போட்டியானது ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹெடி மற்றும் ஜியோ சினிமாஸ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

