மேலும் அறிய

Neymar: சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறாரா நெய்மர்..? இதுதான் காரணம்..!

ஃபிபா உலகக் கோப்பை 2022 போட்டி காலிறுதி சுற்றில் பெனால்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி பெருமையை பெற்றது. 

ஃபிபா உலகக் கோப்பை 2022 போட்டி காலிறுதி சுற்றில் பெனால்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி பெருமையை பெற்றது. 

பிரேசில் தோல்வி:

உலகக் கோப்பை கால்பந்து தொடர் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இந்த போட்டித் தொடரில் ஏற்கனவே லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் இரண்டு கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்த நிலையில், போட்டியின் முடிவுகளுக்குப்பிறகு இணையத்தில் பிரேசில் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான நெய்மர் மற்றும் அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி என இருவரது பெயரும் இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதற்கு முன்னதாக, நேற்று நடந்த முதலாவது கால் இறுதிப் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியும் குரோஷிய அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியினை பார்த்தவர்கள் பெரும்பாலும், பிரேசில் வெற்றிபெற்றுவிடும் என நினைத்துகொண்டு இருக்கையில் போட்டியின் கடைசி நிமிடங்களில் பெனால்டி ஷாட்டில் பிரேசில் அணி தோல்வியைத் தழுவியது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. மேலும், குரோஷிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

கடைசியாக கடந்த 2022 ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி, அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பை ‘நாக்- அவுட்’ சுற்றுகளிலும் தோல்வியடைந்து வெளியேறியது. 

விலகுகிறாரா நெய்மர்..?

மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்களை போன்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கும் இது கடைசி உலகக் கோப்பை தொடராக பார்க்கப்படுகிறது. 30 வயதான நெய்மர் தோல்விக்கு பிறகு பேசுகையில், “ சர்வதேச அளவில் மீண்டும் விளையாடுவேன்னா என்று தெரியவில்லை. ஆனால், அதற்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. 

என்னை பொறுத்தவரை பிரேசில் சர்வதேச அணிக்கான விளையாடுவேனா என்று என்னால் 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது. எனக்கு எது நல்லது என்பது நான் கொஞ்சம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்று தெரிவித்தார். 

நெய்மர் இப்படியாக கருத்துகளை கூறியது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, பிரேசில் அணிக்கு புதிய பயிற்சியாளர் வர உள்ளதுதான். பிரேசில் அணியின் தற்போதை பயிற்சியாளர் டைட் தற்போது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் உளவியல் ரீதியாக அழிந்துவிட்டேன். சந்தேகத்திற்கு இடமின்றி, இது என்னை மிகவும் காயப்படுத்திய தோல்வி. 10 நிமிடங்களுக்கு நான் முடங்கிப்போயிருந்தேன். அதன் பிறகு நான் நிற்காமல் கண்ணீரில் விழுந்தேன். இது நீண்ட காலத்திற்கு வலிக்கும். குரோஷியா அணியுடனான தோல்வி வலிமையாக தோல்வி. உண்மையில் இந்த தோல்வி கஷ்டமாக இருந்தது. ஏற்கனவே சொன்னது போல் பிரேசில் அணியுடனான எனது பயிற்சியாளர் பணி முடிவடைந்தது. எனவே அமைதியாக விடைபெறுகிறேன்” என்றார். 

இதையடுத்து, பிரேசில் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் வர உள்ளதால் அவருடனான நட்பு நெய்மருக்கு எப்படி அமையும் என்ற சந்தேகம் நெய்மருக்கு எழுந்தது. அதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட நெய்மர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவரான ஜாம்பவானாக பார்க்கப்படும் பீலேவின் சாதனையை தற்போது நெய்மர் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 77 கோல்களுடனுன் சமநிலையில் உள்ளனர். 

டைட் பயிற்சியின்கீழ்..

டைட்டின் பயிற்சியின் கீழ் பிரேசில் அணி 81 போட்டிகளில் விளையாடி 61 வெற்றியும், 13 டிராவும், 7 தோல்வியையும் கண்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget