Cristiano Ronaldo:என்னோட இலக்கே வேற..40 வயசானாலும் நம்பிக்கையை விட மாட்டேன்.. கண் கலங்கிய ரொனால்டோ
நான் விரைவில் 900 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பேன். ஆனால் என்னுடைய இலக்கு 1000 கோல்கள் அடிப்பது தான் என்று ரொனால்டோ கூறினார்.
கால்பந்து ஜாம்பவான்:
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 5 முறை பாலன் டிஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் இருக்கிறார். எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் சேனலை கடந்த 6 நாட்களுக்கு முன்பு தொடங்கினார்.
1000 கோல்கள்தான் இலக்கு:
தற்போதுவரை 50 மில்லியன்ஸ் சப்ஸ்கிரைபர்ஸ்களை பெற்றுள்ளார். இச்சூழலில் முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்டுடன் YouTube சேனலில் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரொனால்டோ 1000 கோல்களை எட்டுவது தான் என்னுடைய இலக்கு என்று கூறியுள்ளார். "நான் விரைவில் 900 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பேன். ஆனால் என்னுடைய இலக்கு 1000 கோல்கள்தான். அப்போது எனக்கு 40 வயதாகி இருக்கும்.
11 வயதில் இருந்தே இந்த உலகின் மிகச்சிறந்த கால்பந்துவீரன் நான்தான் என சொல்லிக்கொள்வேன். நான் அடித்த அனைத்து கோல்களுக்கும் என்னிடம் ஆதாரம் வீடியோவாக இருக்கிறது. நான் எப்போதுமே உயர்வாக சிந்திப்பவன். நான் என்னுடைய 11 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் கனவுகளை துரத்தினேன். அப்போது நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. ஆனாலும் என்னுடைய கனவுகளை நோக்கி நான் நம்பிக்கையுடன் ஒடினேன். அதனால் தான் இன்றைக்கை என்னை பலகோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்"என்று கூறியுள்ளார்.