FIFA WC Winners Runners Up List : உலகக்கோப்பை கால்பந்து : அதிக முறை சாம்பியன்..! அதிக முறை ரன்னர்..! முழு பட்டியல்..
உலககோப்பை கால்பந்து தொடரை காண்பதற்காக கத்தார் நாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கத்தார் நாட்டில் வரும் 20-ந் தேதி உலககோப்பை கால்பந்து போட்டித் தொடர் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடரை கண்டுகளிக்க கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
உலககோப்பை கால்பந்து மகுடத்தை அதிக முறை கைப்பற்றிய அணியாக பிரேசில் திகழ்கிறது. உலககோப்பை கால்பந்தை 1958-ஆம் ஆண்டு, 1962ம் ஆண்டு, 1970ம் ஆண்டு, 1994ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டுகளில் என 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஜாம்பவனாக திகழ்கிறது.
அதிக முறை சாம்பியன் :
- பிரேசில் - 5 முறை
- இத்தாலி - 4 முறை
- ஜெர்மனி - 4 முறை
- அர்ஜெண்டினா – 2 முறை
- உருகுவே - 2 முறை
- பிரான்ஸ் - 2 முறை
- இங்கிலாந்து - 1 முறை
- ஸ்பெயின் - 1 முறை
அதிக முறை ரன்னர் :
4 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பறறிய ஜெர்மனி அணிதான் உலககோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை ரன்னர் என்ற இடத்தையும் பிடித்த அணியாக உள்ளது.
- ஜெர்மனி - 4 முறை
- அர்ஜெண்டினா - 3 முறை
- பிரேசில் - 2 முறை
- இத்தாலி - 2 முறை
- ஹாலந்து - 2 முறை
- செக்கோஸ்லோவியா – 2 முறை
- ஹங்கேரி - 2 முறை
- சுவீடன் - 1 முறை
- பிரான்ஸ் - 1 முறை
- நெதர்லாந்து - 1 முறை
- குரோஷியா - 1 முறை
மேலும் படிக்க : FIFA World Cup Champions List : உலகக்கோப்பை கால்பந்து: மகுடம் சூடியவர்கள் யார் யார் தெரியுமா? முழு பட்டியல்..
மேலும் படிக்க : Lionel Messi : இத்தனை சாதனைகள்... எனினும் எட்டாத இலக்கு... கடைசி உலகக் கோப்பையை வெல்வாரா மெஸ்ஸி?