England vs Pakistan live streaming online: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இன்று மோதல்...எங்கே எப்போது? விவரம் இதோ!
இன்று (நவம்பர் 11) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் 10 அணிகள் விளையாடியது.
இதில், முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதேபோல், தென்னாப்பிரிக்க அணி , ஆஸ்திரேலிய அணிகளும் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இதனிடையே, (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் ஏறக்குறைய நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான்:
8 லீக் போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் பரிதாப தோல்வியை சந்தித்தது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி. இந்த முறை கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கருத்தப்பட்ட இங்கிலாந்து அணி, முன்னதாகவே எலிமினேட் ஆகிவிட்டது.
அதேபோல், 8 போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதனிடையே, இன்று (நவம்பர் 11) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.
இந்த போட்டியில் சில அதிசயங்கள் நடைபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல முடியும்.
அதன்படி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 274 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற வேண்டும்.
இல்லையென்றால் 400 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்து 112 ரன்னுக்குள் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் 450 ரன்கள் எடுத்து 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல், பாகிஸ்தான் அணி 500 ரன்கள் எடுத்தால் 211 ரன்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படுத்த வேண்டும், இதில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும்.
ஒரு வேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடினாலே பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.
நேருக்கு நேர்:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 91 ஒரு நாள் போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளது. இதில், இங்கிலாந்து அணி 56 முறையும், பாகிஸ்தான் அணி 32 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இலவச லைவ் ட்ரீமிங்:
டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இந்த போட்டியை இலவசமாக பார்க்கலாம். அதன்படி, மொபைலில் மட்டுமே இலவசமாக பார்க்க முடியும். லேப்டாப் மற்றும் டிவியில் பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சந்தா செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: Pakistan Semi Final Chance: நியூசிலாந்து வெற்றி... இதை செய்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு
மேலும் படிக்க: Rachin Ravindra Record: உலகக்கோப்பை தொடர்... சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின் - விவரம் இதோ!