மேலும் அறிய

என்னா அடி..! இதுதான் இமாலய சிக்ஸரா? - வைரலாகும் லிவிங்ஸ்டோன் சிக்ஸ் வீடியோ!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் லிவிங்ஸ்டோன் அடித்த இமாலய சிக்சர் வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி கேப்டன் பட்லரின் அதிரடி அரைசதம் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியால் 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி போட்டியை வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸின் போது லியாம் லிவிங்ஸ்டோன் அடித்த இமாலய சிக்சர் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

 

இங்கிலாந்து இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16ஆவது ஓவரை ஹசிஃப் ராஃப் வீசினார். அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட லியாம் லிவிங்ஸ்டோன் அதை சிக்சருக்கு விரட்ட முற்பட்டு தூக்கி அடித்தார். அவர் அடித்த அடியில் அந்தப் பந்து லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தை தாண்டி அருகே இருந்த ரக்பி விளையாட்டு மைதானத்தில் விழுந்தது. இந்த சிக்ஸ் தொடர்பான வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இது தான் பெரிய சிக்சரா? லீட்ஸ் ரைநோஸ் பந்தை கொஞ்சம் திருப்பி கொடுங்கள்" எனப் பதிவிட்டிருந்தது. ஏனென்றால் அந்த மைதானத்திற்கு அருகே இருந்த ரக்பி மைதானம் லீட்ஸ் ரைநோஸ் என்ற ரக்பி அணியைச் சேர்ந்தது. 

 

இதற்கு அந்த ரக்பி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதில் பதிவையும் செய்துள்ளது. அதில், "நல்ல ஷாட் லிவிங்ஸ்டோன். கார்டன் கிரிக்கெட் விதிகள் அமலில் இல்லை. அந்த விதி அமலில் இருந்திருந்தால் அடுத்தவரின் இடத்திற்குள் தூக்கி அடித்தால் நீங்கள் அவுட். எங்களுடைய ஒரு வாசலை திறந்து வைத்துள்ளோம். நீங்களே வந்து பந்தை எடுத்து கொள்ளுங்கள்" என்று நக்கலாக பதிவிட்டுள்ளது. மேலும் இந்த 122 மீட்டர் சிக்சர் வீடியோவை பார்த்து பலரும் வியந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

இவ்வாறு இந்த சிக்சர் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பலரும் பதிவிட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget