மேலும் அறிய

செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!

செந்தில் பாலாஜி உத்தமர் என்று காட்டுவதற்காக ஆர்.எஸ்.பாரதி முன்வைத்துள்ள வாதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை அவரைச் சார்ந்தவர்கள் தவிர, முட்டாள்கள் கூட நம்ப மாட்டார்கள்.

 ஊழலே செய்யாத அப்பாவி என்று செந்தில் பாலாஜி சொன்னதையெல்லாம் நம்ப எடுப்பார் கைப்பிள்ளையா மு.க.ஸ்டாலின் என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் வாங்கி, அதை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்ப்ட்டு சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜியை தியாகி என்று முதலமைச்சர் பாராட்டினால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று ராமதாஸ் எழுப்பிய வினாக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லை. மாறாக, மு.க.ஸ்டாலினின் பலவீனங்களும், துரோகங்களும், சமூக அநீதிகளும்தான் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள்

செந்தில் பாலாஜி உத்தமர் என்று காட்டுவதற்காக ஆர்.எஸ்.பாரதி முன்வைத்துள்ள வாதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை அவரைச் சார்ந்தவர்கள் தவிர, முட்டாள்கள் கூட நம்ப மாட்டார்கள். 2015-ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினாராம். அதன்பின் 2018ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தபோது, தான் குற்றமற்றவன், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னாராம்; அதனால் அவர் குற்றமற்றவராம்.

கம்பி கட்டும் கதை

எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று ஆளுனரிடம் மனு அளித்ததால் தான் செந்தில் பாலாஜி மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாம். ஆர்.எஸ். பாரதியின் இந்த கம்பி கட்டும் கதைகளையெல்லாம் அறிஞர் அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்த திமுகவினர் கூட நம்ப மாட்டார்கள்.

”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று வீற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் 7 முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை மேயர், ஒருமுறை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர், ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அரசியலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் போது அதை பலமுறை சரிபார்க்க வேண்டும் என்ற அடிப்படை அவருக்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர் 2016 தேர்தலின்போது அவரிடமிருந்த விவரங்களை நம்பிக் கொண்டு செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினாராம்; 2018ஆம் ஆண்டில் திமுகவில் சேர செந்தில் பாலாஜி முன்வந்த போது அவர் கொடுத்த விளக்கங்களை ஏற்று அவரை உத்தமர் என்று  மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டாராம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையா?

செந்தில் பாலாஜி சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கா மு.க.ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார்? 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர்; வழக்குத் தொடர்ந்தனர். அவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தது.  இவை எதுவும் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வரவில்லையாம். தியாகசீலர் செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?

செந்தில் பாலாஜி மீது குளித்தலை பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், செந்தில் பாலாஜி கூறியதுதான் உண்மை என்றால், பொய்ப்புகார் கூறியதற்காக  செந்தில் பாலாஜியிடம் எப்போதாவது மு.க.ஸ்டாலின்  வருத்தம்  தெரிவித்தாரா? பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து, அந்தக் குடும்பங்களையெல்லாம் நடுத்தெருவுக்கு கொண்டு வந்த செந்தில் பாலாஜியை விட, அவரை உத்தமர் என்றும், தியாகத்தின் திருவுருவம் என்றும் புகழ்மாலை பாடிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் எப்படி நம்புவர்?

மத்திய அரசிடம் பம்மும் திமுக 

அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை எதிர்க்காமல் பா.ஜ.க.விடம் பா.ம.க. பம்மிக் கிடப்பதாக பாரதி கூறியிருக்கிறார். 2ஜி வழக்கில் சிக்கி கைது, சிறை என்று சின்னாபின்னமாகிக் கிடந்த திமுகவிடம் 2011ஆம் ஆண்டில் காங்கிரஸ் எவ்வாறு தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தியது என்பதை அங்கேயே முகாமிட்டிருக்கும் பாரதி அறியாதவர் அல்ல. அறிவாலயத்தில் மேல்மாடியில் சி.பி.,ஐயைக் கொண்டு சோதனை நடத்திக் கொண்டு கீழ்த்தளத்தில் நடைபெற்ற பேச்சுகளின் போது முற்றிலுமாக சரணடைந்து, பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டிருந்த தொகுதிகளில் ஒன்றை இரவல் வாங்கி காங்கிரசுக்கு 64 இடங்களை தாரை வார்த்ததே அதற்குப் பெயர்தான் பம்முதல்.  இப்போதும் கூட மத்திய அரசிடம் திமுக பம்மிக் கொண்டுதான் இருக்கிறது.

எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையிலும், மக்கள் நலனிலும் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடையாது. இதில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஏதேனும் ஐயம் இருந்தால், பாட்டாளி மக்கள் கட்சியின் தயவால் கட்டப்பட்டுள்ள உதயநிதியின் தாத்தா கலைஞரின் கல்லறைக்கு சென்று காதை வைத்துப் பார்க்கட்டும்.‘‘தைலாபுரத்திலிருந்து தான் எனக்கு தைலம் வருகிறது’’ என்ற முழக்கம் அவருக்கு கேட்கும்.

கலைஞர் செய்த சத்தியங்கள் நினைவிருக்கிறதா?

ராமதாஸ் சத்தியத்தைப் பற்றி பேசும் ஆர்.எஸ்.பாரதிக்கு இதுதான் எனது கடைசி தேர்தல்; இனி நான் போட்டியிட மாட்டேன் என்று கலைஞர் செய்த சத்தியங்கள் நினைவிருக்கிறதா? என் குடும்பத்திலிருந்து எனது மகனோ, மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 2016ஆம் ஆண்டில் சன்தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மு.க.ஸ்டாலின் சத்தியம் செய்தது பாரதிக்கு மறந்து விட்டதா?

கட்சிக்காக உழைத்த பலர் இருக்கும் போது நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் சத்தியம் செய்தது பாரதிக்கு நினைவில்லையா? அரசியலுக்கு வந்து சட்டமன்ற உறுப்பினரான பிறகும் எனக்கு அமைச்சர் பதவி மீது ஆசையில்லை என்று சத்தியம் செய்து விட்டு அதை அடைந்ததும், துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் வதந்தி என்று கூறி விட்டு, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி,  பொன்முடி போன்றவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டதும் பாரதிக்கு தெரியாதா? பதவிக்காக சத்தியத்தையெல்லாம் சர்க்கரை பொங்கலாக்கும் பாரதி முதல் மு.க.ஸ்டாலின் வரை எந்த திமுகவினருக்கும் எங்கள் ராமதாஸ் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

திமுகவுக்கும் சமூகநீதிக்கும் எள்ளளவும் தொடர்பு கிடையாது. தமிழ்நாட்டை திமுக 6 முறை ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான வன்னியர்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் எப்போதாவது தலா 4 அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா? திமுகவின் சமூக அநீதி அரசியலை ராமதாஸ் அம்பலப்படுத்திய பிறகுதானே, இப்போது இரு சமூகங்களுக்கும் தலா 4 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எள்ளளவும் தகுதி இல்லை.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுகவும், திமுக அரசும் கொள்கையின் சின்னங்களா? இல்லையே, அவை வணிகத்தின் அடையாளங்கள்தானே. திமுகவுக்காக தலைமுறை தலைமுறையாக உழைத்தவர்களுக்கா அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது? மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் எ.வ.வேலு, சாத்தூர் இராமச்சந்திரன், இரகுபதி, சு.முத்துசாமி, இராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு என 7 பதவிகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவி வந்தவர்களுக்குத்தானே தாரைவார்க்கப்பட்டுள்ளன.

நிர்வாகப் புலிகள் என்பதாலா?

அதிலும் திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கெல்லாம் வழங்கப்படாத பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, துறைமுகங்கள் துறை ஆகியவை எ.வ.வேலுவுக்கும், மின்சாரம், மதுவிலக்குத்துறை ஆகியவை செந்தில் பாலாஜிக்கும், வருவாய்த்துறை சாத்தூர் இராமச்சந்திரனுக்கும்,  வீட்டுவசதி முத்துசாமிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை சேகர்பாபுவுக்கு வழங்கப் பட்டதன் மர்மம் என்ன? அவர்கள் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், கலைஞர் கருணாநிதியையும் விட கொள்கை குன்றுகள் என்பதாலா, நிர்வாகப் புலிகள் என்பதாலா? கரப்சன், கமிசன், கலெக்சனில் சிறந்தவர்கள் என்பதாலும், அதில் தலைமைக்கு உரிய பங்கை தவறாமல் தந்து விடுவார்கள் என்பதாலும்தானே?

திமுகவின் தலைமைக்கு செந்தில் பாலாஜி வேண்டியவர் என்றால் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொள்ளட்டும். மாறாக, அவருக்கு தியாகி, உத்தமர் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவது அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நீதி கிடைக்க பெரும் தடையாகி விடும். எனவே,  செந்தில் பாலாஜியின் புகழ்பாடுவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதிலும் தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்’’.

இவ்வாறு பாமக செய்தித் தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget