Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சாம்பியனான நீரஜ் சோப்ரா 2023 ஆண்டினை வெற்றியுடன் தொடங்கியுள்ளார். தோஹா டயமண்ட் லீக்கில் நேற்று அதாவது, மே மாதம் 5ஆம் தேதி 10 பேர் கொண்ட ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றியுடன் இந்த ஆண்டு தனது பயணத்தினை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு டயமண்ட் டிராபியை வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா தான். அத்தகைய பெருமையைப் பெற்ற நிராஜ் இந்த ஆண்டும் 88.67 மீட்டர் ஈட்டியை எறிந்து வெற்றிபெற்றுள்ளார்.
- முதல் முயற்சி: 88.67 மீ
- 2வது முயற்சி: 86.04 மீ
- 3வது முயற்சி: 85.47மீ
- 4வது முயற்சி: குறிப்பிடப்பட்ட இடத்தில் இருந்து தவறுதலான திசையில் எறிந்து விட்டார்.
- 5வது முயற்சி: 84.37 மீ
- 6வது முயற்சி: 86.52 மீ
நீரஜின் முதல் முறையாக ஈட்டியை எறிந்தபோதே, 88.67 தொலைவுக்கு வீசியதால் அவரது வெற்றி அப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நீரஜ் 90 மீ வீசாதது அவரது ரசிகர்காளுக்கு மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் போட்டியை அவர் வென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போட்டி நடைபெற்ற ஐகானிக் ஸ்டேடியத்தில் மீக நீண்ட தொலைவுக்கு வீசும் அளவிற்கு மைதான ஏற்பாடுகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனிநபர் அதிகபட்சத்தையும் நிரஜால் எட்ட முடியவில்லை.
Good start. Neeraj Chopra 1st throw 88.67m. #DohaDiamondleague pic.twitter.com/GhQ21bYTNu
— Athletics Federation of India (@afiindia) May 5, 2023
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியானது கத்தார் விளையாட்டுக் கழகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சோப்ரா வரலாற்று தங்கப் பதக்கம் வென்றதிலிருந்து, நிறைய இந்தியர்களிடம் நிரஜின் தாக்கம் உள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கான 2023 சீசன் தொடக்க ஆட்டத்துக்கு முன்னதாக, ஈட்டி எறிதலில் இந்த தோஹா டைமண்ட் போட்டியில் 90 மீட்டருக்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சமீபகாலமாகவே 90 மீட்டர் என்பது நிரஜால் வீசமுடியும் எனும் நம்பிக்கையை அனைவரிடத்திலும் நம்பிக்கையை நிரஜ் விதைத்ததுடன் தனக்கென அமைத்துக் கொண்ட ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. நீரஜ் சோப்ராவின் பெர்சனல் பெஸ்ட் தற்சமயம் 89.94 மீ ஆக உள்ளது, ஆனால் அவர் தனக்கென மனதில் கொண்டுள்ள இலக்கை மிஞ்சும் வகையில் தனிப்பட்ட சிறந்த ஒரு புத்தம் புதிய சாதனையைப் படைப்பார் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த டைமண்ட் லீக் போட்டியில் 88.44 மீட்டருக்கு ஈட்டியை வீசி முதல் இடத்தைப் பெற்றதுடன், டைமண்ட் லீக் வரலாற்றில் முதல் வெற்றியைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.