மெஸ்ஸி தங்கிய ஹோட்டல்.. ஒரு நாளுக்கு இவ்வளவு வாடகையா? தல சுத்துதே.!
பாரீஸ் நகரத்தில் உள்ள உலகின் உயர்ந்த சொகுசு விடுதிகளில் ஒன்றான லீ ராயல் மான்சேவில், பி.எஸ்.ஜி. அணியில் புதியதாக இணைந்துள்ள மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக வலம் வருபவர் லயனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மெஸ்ஸி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோ கிளப் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் பிரபலமான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் எனப்படும் பி.எஸ்.ஜி. அணிக்காக இரண்டாண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பி.எஸ்.ஜி. அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மெஸ்ஸிக்கு, அந்த அணி நிர்வாகம் பாரீஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியான லீ ராயல் மான்சே ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நட்சத்திர விடுதியின் வாடகை ஒரு இரவுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ஒரு இரவுக்கு அந்த சொகுசு விடுதியில் தங்குவதற்கு ரூபாய் 17.5 லட்சம் மதிப்பு ஆகும். இந்த நட்சத்திர சொகுசு விடுதியில் நீச்சல்குளம், திரையரங்கம், தலைசிறந்த பிரெஞ்சு உணவுகள் கொண்ட உணவு விடுதிகள் உள்ளன. இந்த நட்சத்திர விடுதியில் இருந்து பார்த்தால் பாரிசீன் அழகையும், பாரீஸ் நகரமும், வானமும் தொடுவது போன்ற காட்சி மிகவும் அழகாக இருக்கும்.
மெஸ்ஸி இந்த நட்சத்திர விடுதியில் தனது மனைவி அன்டோனேலா மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் தங்கினார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் புகைப்படங்களும், அவர் ஹோட்டலில் இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யப்பா.! வேற லெவல் ஸ்டெண்ட்ஸ் - மில்லியன் பேர் பார்த்த சிறுமியின் வைரல் வீடியோ!
மெஸ்ஸி தற்போது பி.எஸ்.ஜி. அணிக்காக இரண்டாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விருப்பப்பட்டால் மூன்று ஆண்டுகளாகவும் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ளலாம். மெஸ்ஸிக்கு பி.எஸ்.ஜி. அணி மூலமாக ஆண்டு வருமானமாக மட்டும் இந்திய மதிப்பில் ரூபாய் 360 கோடி கிடைக்கும்.
மெஸ்ஸியின் ஊதியம் தவிர அவரது புகைப்பட உரிமைக்காகமு் அவருக்கு ஊதியம் வழங்கப்படும். பி.எஸ்.ஜி. அணிக்காக அவர் 30 என்கிற எண் கொண்ட ஜெஸ்ஸியை அணிந்து ஆட உள்ளார். மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் 30 என்கிற எண் கொண்ட ஜெர்சி அணிந்து ஆடுகிறார் என்று தெரிந்தவுடன், இணையதளத்தில் 30ம் எண் கொண்ட மெஸ்ஸியின் ஜெர்சிகள் 30 நிமிடங்களில் மொத்தமாக விற்பனையாகியது.
இதுமட்டுமின்றி, மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியுடன் கிரிப்டோகரன்சி வருமானப் பங்கிலும் கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான நோயாக கொரோனா தொற்று மாறலாம்! - ஆய்வில் தகவல்..!