(Source: ECI/ABP News/ABP Majha)
Bhavina patel : காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸில் தங்கம் வென்ற தங்கம்.. பிரதமர் சந்திப்பு குறித்து, பவினா சொன்ன சுவாரஸ்யம்..
பெண்கள் ஒற்றையர் பிரிவு - 4-5 வகுப்புகளில் நைஜீரியாவின் இஃபேச்சுக்வுடே கிறிஸ்டியானா இக்பியோவை வீழ்த்தினார்.
சனிக்கிழமையன்று காமன்வெல்த் விளையாட்டு 2022ல் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, பாரா டேபிள் டென்னிஸ் வீரரும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவருமான பவினா படேல், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். 2022ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், சனிக்கிழமை அன்று NEC ஹால் 3-இல் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு - 4-5 வகுப்புகளில் நைஜீரியாவின் இஃபேச்சுக்வுடே கிறிஸ்டியானா இக்பியோவை வீழ்த்தி இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் தங்கப் பதக்கம் வென்றார்.
இதுகுறித்துப் பேசிய அவர்,"எனது செயல்திறனில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக நான் பயிற்சி எடுத்த விதம் எனது விளையாட்டில் நிஜமாகவே வெளிப்பட்டது. 2024 ஒலிம்பிக்கிற்கு நான் தயாராகி வருகிறேன், அதுவே எனது அடுத்த இலக்கு. இந்தப் பதக்கத்தை எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். பிரதமர் மோடியை சந்திப்பதில் ஆவலாக உள்ளேன்" என்று தனது போட்டிக்கு பிறகு பவினா கூறியுள்ளார். பவினா படேல் 3-0 (12-10, 11-2, 11-9) என்ற நேர் செட்களில் இக்பியோயை வென்றார். பவினா படேல் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார் மேலும் இக்பியோவுக்கு எதிரான முதல் கேமை 12-10 என கைப்பற்றினார்.
நைஜீரிய டேபிள் டென்னிஸ் வீராங்கனைக்கு படேல் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை, சிறப்பாக விளையாடி முதல் இரண்டு கேம்களை ஒருதலைப்பட்சமாக - 12-10, 11-2 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை நைஜீரியாவின் இக்பியோயை 12-10, 11-2, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
வெள்ளிக்கிழமை பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு 2022 இல் அரையிறுதியில் இங்கிலாந்தின் சூ பெய்லியைத் தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததால் அவர் தனது நாட்டிற்கு மற்றொரு பதக்கத்தை உறுதிப்படுத்தினார். பவினா பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் 3-5 என்ற கணக்கில் எதிரணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் அணியின் தவிர்க்கமுடியாத அங்கமாகக் கருதப்படுகிறார். அவர் 11-6, 11-6, 11-6 என்ற கணக்கில் சூ பெய்லியை மூன்று ஆட்டங்களுக்குள் வென்று இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார்.
முன்னதாக பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் ஃபிஜியின் அகனிசி லாடுவை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியை எட்டினார். அவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-5 க்கு 11-1, 11-5, 11-1 என்ற செட் கணக்கில் லாடுவை தோற்கடித்தார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 தொடங்கி பர்மிங்காமில் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும்.