மேலும் அறிய

Cristiano Ronaldo | 7 பெட்ரூம்.. வேற லேவல் ஜிம்.. ரொனால்டோ தங்க இருக்கும் சொகுசு பங்களா - வைரலாகும் புகைப்படங்கள்

மான்செஸ்டர் அணிக்காக ஆட உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இங்கிலாந்தில் உள்ள 7 பெட்ரூம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், அந்த நாட்டின் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது 36 வயதான ரொனால்டோ கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக ஆடி வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளில் மிகவும் பிரபலமான இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். ரொனால்டோ ஏற்கனவே 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடியுள்ளார்.



Cristiano Ronaldo | 7 பெட்ரூம்.. வேற லேவல் ஜிம்.. ரொனால்டோ தங்க இருக்கும் சொகுசு பங்களா - வைரலாகும் புகைப்படங்கள்

இத்தாலி நாட்டின் யுவன்டஸ் அணியில் இருந்து தற்போது மான்செஸ்டர் அணிக்கு மாறியுள்ளதால், ரொனால்டோ தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார். இங்கிலாந்தில் 7 பெட்ரூம்கள் கொண்ட பிரம்மாண்ட பங்களாவில் தற்போது அவர் தங்கியுள்ளார். இந்த பங்களாவில் ரொனால்டோவுடன் அவரது காதலி ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ், அவர்களது குழந்தைகளான 11 வயதான கிறிஸ்டியவோ ரொனால்டோ ஜூனியர், 4 வயதான ஈவா மரியா தாஸ் சான்டோஸ், மாடோ ரொனால்டோ மற்றும் 3 வயதான  அலானா மார்டினா தாஸ் சான்டாஸ் அவெய்ரா ஆகியோர் தங்கியுள்ளனர்.

இந்த பங்களாவிற்கு 6 பேர் கொண்ட பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரொனால்டோ கட்டுக்கோப்பான உடலை பராமரித்து வருவதால், இந்த பங்களாவிலும் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன உடற்பயிற்சி கூடமும் உள்ளது. மேலும், அழகான நீச்சல் குளமும் இந்த பங்களாவில் உள்ளது.


Cristiano Ronaldo | 7 பெட்ரூம்.. வேற லேவல் ஜிம்.. ரொனால்டோ தங்க இருக்கும் சொகுசு பங்களா - வைரலாகும் புகைப்படங்கள்

இந்த பங்களாவில் ஹால் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. மேலும், வீட்டின் உள்ளே இருந்தே வெளி அழகை ரசிக்கும் விதமாக கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த பிரம்மாண்ட பங்களாவிற்கு உள்ளேயே தனி திரையரங்கம் ஒன்றும் உள்ளது. ரொனால்டோவின் இந்த புதிய பங்களாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இரண்டாவது முறையாக களமிறங்க உள்ள ரொனால்டோ தனது முதல் போட்டியை விரைவில் ஆட உள்ளார். மேலும், தான் இங்கு விடுமுறைக்காக வரவில்லை என்றும், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆடையை அணிந்து வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.




Cristiano Ronaldo | 7 பெட்ரூம்.. வேற லேவல் ஜிம்.. ரொனால்டோ தங்க இருக்கும் சொகுசு பங்களா - வைரலாகும் புகைப்படங்கள்

ஸ்போர்டிங் கிளப் போர்ச்சுகல் அணிக்காக ஆடி வந்த ரொனால்டோ மான்செஸ்டர் அணிக்காக 2003ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு வரை அந்த அணிக்காக அவர் ஆடியபோது அந்த அணி 8 கோப்பைகளை கைப்பற்றியது. பின்னர், 2009ம் ஆண்டு  முதல் 2018ம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடினார். அந்த அணிக்காக மட்டும் 311 கோல்களை அடித்துள்ளார். பின்னர், இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக ஆடினார். தற்போது 217 கோடிக்கு 2 ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget