மதங்களை கடந்த காதல்;எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதலித்த பெண்ணை கரம் பிடித்த ஜாகீர் கான்! எப்படி?
முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர் காதலித்து இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஜாகீர் கானும் ஒருவர். முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2000 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலியின் தலைமையில் அறிமுகமான ஜாகீர் கான், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், பொறியியல் படிப்பை கைவிட்டு கிரிக்கெட்டை தனது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தார்.
இன்ஜினியர் டூ கிரிக்கெட் வீரர்:
மகாராஷ்டிர மாநிலம் ஸ்ரீராம்பூரில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பிறந்தார் ஜாகீர் கான். ஜாஹீரின் ஆரம்பக் கல்வியானது ஹிந்த் சேவா மண்டல் நியூ மராத்தி ஆரம்பப் பள்ளி, ஸ்ரீராம்பூர். இதன் பிறகு கே.ஜே.சோமையா மேல்நிலைப் பள்ளியில் மேற்படிப்பு படித்தார்.
ONE OF THE MOST ICONIC SPELL IN WORLD CUP FINAL HISTORY 🙇
— Johns. (@CricCrazyJohns) October 7, 2024
- Happy birthday wishes to Legendary Zaheer Khan. pic.twitter.com/WXkETxT4M2
பிறகு இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவரது இதயமும் மனமும் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஜாஹீரின் ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை, நாட்டில் பல பொறியாளர்கள் இருக்கிறார்கள். நீ கிரிக்கெட்டில் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினார். அவரது தந்தையின் இந்த சப்போர்ட்டால் இன்ஜினியர் டூ கிரிக்கெட் வீரராக பயணம் தொடங்கியது.
இன்று ஜாகீர் கான் 'சாக்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகீர் கான் தனது 17வது வயதில் மும்பைக்கு வந்த பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ஜிம்கானா கிளப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஜாகீர் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரபலமடைந்தார். அப்போதைய MRF இன் பேஸ் அறக்கட்டளை TA சேகர், ஜாஹீர் கானைக் கவனித்தார். அவர் ஜாஹீர் கானின் திறமையை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜாஹீர் தன்னைத் தயார்படுத்தி முதல்தர மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.2011 உலகக் கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக் கோப்பையில் ஜாகீர் கான் மொத்தம் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது சர்வதேச வாழ்க்கையில் மொத்தம் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும், 17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாகீரின் காதல் கதை:
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஜாகீர் கான் காதலித்து இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக் தே இந்தியா படத்தில் நடித்த சகாரிகா காட்கேவை தான் ஜாகீர் கான் திருமணம் செய்தார். ஆரம்பத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த உறவுக்கு முற்றிலும் எதிராக இருந்தனர், ஆனால் ஜாஹீரை சந்தித்த பிறகு, சாகரிகாவின் தந்தை உறவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
பாலிவுட்டில் இருந்து விலகி இருக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சகரிகாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊகங்கள் எழுந்தன. இருப்பினும், சகரிகா, ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜாகீர் தனது வாழ்க்கைக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாக தெளிவுபடுத்தினார். ஜாகீர் கான் மற்றும் சகாரிகா காட்கே 2017 இல் நிச்சயதார்த்தம் செய்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துதிருமணத்திற்குப் பிறகு, தொழிலில் இருந்து விலகிய சாகரிகா, இப்போது புடவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.