Yuvaraj Singh: தோனியை கழற்றிவிட்ட யுவராஜ் சிங் - ரசிகர்கள் ஷாக் - இப்படி ஒரு பிளேயிங் லெவனா?
Yuvaraj Singh: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.
Yuvaraj Singh: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின், ஆல் டைம் பிளேயிங் லெவனில் தோனியின் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ்:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம், அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றுள்ளார். வெற்றிக்குப் பிறகு நடந்த நேர்காணலில் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஆல்-டைம் பிளேய்ங் லெவன் தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
யுவராஜ் சிங்கின் ஆல்-டைம் பிளேயிங் லெவன்:
அதன்படி, தனது ஆல்-டைம் பிளேயிங் லெவனின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார். 3 மற்றும் நான்காவது இடங்களுக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பெயர்களை குறிப்பிட்டுள்ளார். ஐந்தாவது இடத்திற்கு தென்னாப்ரிக்காவின் ஏ.பி. டெவிலியர்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனையும், வேகப்பந்துவீச்சில் கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ஃப்ளின்டாஃபையும் தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக தனது பெயரையே யுவராஜ் சிங் பரிந்துரைத்துள்ளார்.
— Dev 🇮🇳 (@time__square) July 13, 2024
யுவராஜ் சிங்கின் ஆல்-டைம் லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் (WK), ஆண்ட்ரே பிளின்டாஃப், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம். யுவராஜ் சிங் (12வது வீரர்)
தோனிக்கு இடமில்லையா?
அதேநேரம், ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட 3 கோப்பைகளை வென்றவரும், இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவருமான தோனியின் பெயர், யுவராஜ் சிங்கின் பிளேயிங் லெவனில் இல்லாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், தோனியின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் இந்திய அணியில் விளையாடினார். அந்த இரண்டு போட்டிகளிலும், இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.