மேலும் அறிய

WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியாவுடன் மோதப்போவது இந்தியாவா? இலங்கையா..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மல்லுகட்டுவதற்கு இலங்கையும், இந்தியாவும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 வி்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் உள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

இந்த சூழலில் இந்த அணிகள் விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே இறுதிப்போட்டிக்கான ரேசில் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் என்று இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, ஏதாவது ஒரு போட்டியில் டிரா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா ஆளானது.

WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியாவுடன் மோதப்போவது இந்தியாவா? இலங்கையா..?

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதி செய்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேசமயம் இறுதிப்போட்டியில் செல்வதற்கான பட்டியலில் உள்ள இந்திய அணி அகமதாபாத்தில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியை வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

இந்தியாவா? இலங்கையா?

ஒருவேளை ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து, இலங்கை அணி நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் வென்றால் இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.

WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியாவுடன் மோதப்போவது இந்தியாவா? இலங்கையா..?

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 68.52 சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்தியா 60.29 சதவீதத்துடன் 2வது இடத்திலும், இலங்கை அணி 53.33 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளன. இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் தற்போது இந்திய அணியும், இலங்கை அணியும் தங்களது அடுத்த டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க உள்ளன. நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகும் இலங்கை வரும் 9-ந் தேதி முதல் டெஸ்ட்டை கிறிஸ்ட்சர்ச்சிலும், 2வது டெஸ்ட் போட்டியை வெலிங்டனிலும் வரும் 17-ந் தேதியும் விளையாட உள்ளது. 

இதனால், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா, இலங்கை அணிகள் விறுவிறுப்பாக அடுத்த போட்டிகளில் ஆட உள்ளன. எந்த அணி முன்னேறினாலும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது இதுவே முதன்முறை ஆகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இங்கிலாந்து மைதானத்தில் மோதியது. ஆனால், அந்த போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்திடம் தவறவிட்டது. 

மேலும் படிக்க:  WTC Final Qualification: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

மேலும் படிக்க: IND vs AUS 3rd Test: மூன்றே நாட்களில் இந்தியாவை சோதித்த சோகம்.. பழி வாங்கும் படலத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget