World Test Championship: அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்.. இத பண்ணா இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்!
பாகிஸ்தான் அணியின் தோல்விமூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு அமோகமாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று பாகிஸ்தான் மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு கலைந்தது.
பாகிஸ்தான் அணியின் தோல்விமூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு அமோகமாக உள்ளது. தற்போது புள்ளி நிலவரத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 3 வது இடத்தில் இலங்கையும் உள்ளது. அதைதொடர்ந்து 4 மற்றும் 5 வது இடத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் உள்ளது.
இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக 6 போட்டிகள் மீதம் உள்ளது. இதில் 2 போட்டிகள் வங்கதேசத்திற்கு எதிராகவும், 4 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி விளையாடும் இந்த 6 போட்டிகளில் 5 ல் வெற்றிபெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அணிகள் | சதவீதம் | புள்ளிகள் | வெற்றி பெற்றது | இழந்தது | டிரா |
ஆஸ்திரேலியா | 75 | 108 | 8 | 1 | 3 |
தென்னாப்பிரிக்கா | 60 | 72 | 6 | 4 | 0 |
இலங்கை | 53.33 | 64 | 5 | 4 | 1 |
இந்தியா | 52.08 | 75 | 6 | 4 | 2 |
இங்கிலாந்து | 44.44 | 112 | 9 | 8 | 4 |
பாகிஸ்தான் | 42.42 | 56 | 4 | 5 | 2 |
இந்திய அணி தகுதி பெறுமா?
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி, இந்த மாதம் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3ல் வெற்றிபெற வேண்டும். 5 ல் வெற்றிபெற்றால் இந்திய அணி நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறும். இந்தியா தனது அடுத்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவர்களின் வெற்றி சதவீதம் 68.06 ஆக உயரும், மேலும் அவர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக இருக்கும்.
இலங்கை அணி:
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பிளாக் கேப்ஸுக்கு எதிரான முக்கியமான 2-டெஸ்ட் தொடரான நியூசிலாந்தில் இலங்கை விளையாட இருக்கிறது. இதில், ஏதேனும் ஒரு போட்டிகளில் இலங்கை தோற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறும்.
தென்னாப்பிரிக்கா:
இறுதிப் போட்டிக்கு முன்னேற தென்னாப்பிரிக்காவுக்கு மீதமுள்ள 5 ஆட்டங்களில் குறைந்தது 3 வெற்றிகள் தேவை. தென்னாப்பிரிக்கா அணி வருகிற ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்டிலும், மார்ச் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.