ICC Test ranking: வங்கதேசத்துடன் த்ரில் வெற்றி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியதா இந்தியா?
வங்கதேசத்துக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
ஞாயிற்றுக்கிழமை மிர்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வங்கதேசத்துக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
2-0 தொடரை வென்றதன் மூலம், மார்ச் 2023 இல் முடிவடையும் WTC 2021-23 சுழற்சியில் தென்னாப்பிரிக்கா (55.76) மற்றும் இலங்கையை (54.55) விட இந்தியா தனது புள்ளி சதவீதத்தை (PCT) 58.92 ஆக உயர்த்தியது.
ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் முன்னணியில் உள்ளது. அதன் உச்சபட்சம் PCT 76.92.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் எஞ்சிய ஆட்டங்கள் முடிவுகளில் இந்தியாவின் வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் நடந்த முதல் டெஸ்டில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
World test cricket ranking #India at top 2..👌👌👏👏 pic.twitter.com/zZjq5f28Ty
— Mallikarjun Pattar (@mallu_pattar) December 25, 2022
சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 13 ஆட்டங்களில் விளையாடி 9 இல் வெற்றியும் 1 இல் தோல்வியும் அடைந்தது. 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 14 ஆட்டங்களில் 8 இல் வெற்றியும், 4 இல் தோல்வியும் அடைந்த 99 புள்ளிகளுடனும் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 11 இடங்களில் 6 இல் வெற்றியும், 5இல் தோல்வியும் பெற்று 72 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.