மேலும் அறிய

World Cup 2023: இக்கட்டான நிலையில் பாகிஸ்தான், இங்கிலாந்து.. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..? ஒரு பார்வை..!

உலகக் கோப்பையில் 22 ஆட்டங்களுக்குப் பிறகு, இந்திய அணி அதிகபட்சமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் உள்ளது.

உலகக் கோப்பையில் இதுவரை மொத்தம் 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 22 போட்டிகளுக்குப் பிறகு, சில அணிகள் அரையிறுதிக்கான பந்தயத்தில் போட்டாபோட்டி முதல் 4 இடங்களில் உள்ளன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து போன்ற சில அணிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இருப்பினும், அரையிறுதிச் சமன்பாட்டில் இன்னும் சில மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் சில அணிகளின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, ​​​​அவர்கள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தெரிகிறது. அத்தகைய அணிகளின் பெயர்களை இங்கு பார்க்கலாம்.. 

உலகக் கோப்பையில் 22 ஆட்டங்களுக்குப் பிறகு, இந்திய அணி அதிகபட்சமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணி, இதுவரை 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரையிறுதிக்கு செல்லும் அணிகளின் பட்டியல்:

டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இவர்களின் ஆட்டத்தை பார்த்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்கா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஆனால் மற்ற அணிகளும் பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளன. தென்னாப்பிரிக்கா அணியின் கேமிங் திறமை மற்றும் செயல்திறன் அனைத்தையும் பார்க்கும்போது, ​​அரையிறுதியில் அவரகளது இடமும் உறுதியாகத் தெரிகிறது.

இந்த மூன்று அணிகளைத் தவிர, ஆஸ்திரேலியா தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மீண்டும் ஒரு சிறந்த அணியாக திரும்புகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ​​அவர்கள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. இதன்மூலம் உலகக் கோப்பையில் 22 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. இந்த நான்கு அணிகளைத் தவிர, சில அணிகள் அரையிறுதியிலிருந்து வெளியேறுவது தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் அடங்கும். இவை அனைத்தையும் தவிர, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் உள்ளன, அவர்கள் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் அரையிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த முடியும்.

மோசமான நிலையில் பாகிஸ்தான்: 

ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தற்போது வரை மோசமாகவே செயல்படுகிறது. நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் எப்படியோ வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதலில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, பின்னர் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. இப்போது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது, ஏனெனில் அவர்களின் மீதமுள்ள நான்கு போட்டிகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக உள்ளன. பாகிஸ்தான் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பாதை இன்னும் கடினமாக இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget