ENG Vs AFG Score LIVE: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி
Eng Vs Afg Score LIVE: இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
Eng Vs Afg World Cup 2023: டெல்லியில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 13வது லீக் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதல்:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற ஆப்கானிஸ்தான் அணி, இன்றைய போட்டி மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், வங்கதேச அணிகு எதிரான போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், அந்த வெற்றியை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டுகிறது.
பலம் & பலவீனங்கள்:
இங்கிலாந்து அணி தரமான முன்கள வீரர்கள், ஆல்-ரவுண்டர்களால் நிரம்பிய வலுவான மிடில் ஆர்டரை கொண்டு பேட்டிங்கில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன் சேர்ப்பதில் கடந்த 2 போட்டியிலும் தடுமாறியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மற்றும் பில்டிங்கிலும் அந்த அணி வலுவாகவே காட்சியளிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பலமாக கருதப்படும் சுழற்பந்து வீச்சு இந்த முறை எடுபடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் பேடஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
நேருக்கு நேர்:
இந்த இரு அணிகளும் இதுவரை 2 முறை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் அருண் ஜெட்லி மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. போட்டியின் இரண்டாம் பாதியில் பனி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யக்கூடும்.
உத்தேச வீரர்கள் விவரம்:
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக்/ பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
வெற்றி வாய்ப்பு: இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு
ஆஃப்கானிஸ்தான் வெற்றி
இறுதில் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் மற்றும் ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகளும் நபி இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; சுழலில் ருத்ரதாண்டவமாடும் ஆஃப்கான்
இங்கிலாந்து அணியின் சாம் கரன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.
5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து - சுழல் தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ்தான்!
இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.
91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.. இங்கிலாந்தை பயமுறுத்தும் ஆப்கானிஸ்தான்!
இங்கிலாந்து கேப்டன் பட்லர் 9 ரன்களுக்கு போல்டான நிலையில், 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இங்கிலாந்து.
ENG Vs AFG Score LIVE: மூன்றாவது விக்கெட்டினை இழந்த இங்கிலாந்து..!
இங்கிலாந்து அணியின் மலான் தனது விக்கெட்டினை 39 பந்தில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் நபி வீசிய போட்டியின் 13வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.