மேலும் அறிய

Watch Video: "ரன் அவுட்தான்! ஆனா நாட் அவுட்" இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ரன் அவுட்டானபோதிலும், 3வது அம்பயர் நாட் அவுட் தந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நேற்று  தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரன் அவுட்:

இந்த போட்டியில் நேற்று நடந்த ரன் அவுட் சம்பவம் ஒன்று ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு மிக கடுமையான விதிகளை கொண்ட விளையாட்டு. அது சில சமயம் அமல்படுத்தப்படும்போதுதான் ரசிகர்களுக்கு இதுபோன்ற விதிகள் இருப்பதே தெரிய வரும்.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தபோது 14வது ஓவரை தீப்தி ஷர்மா வீசியுள்ளார். அப்போது, அந்த ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் எதிர்கொண்டார். அவர் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை நோக்கி பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார்.

நாட் அவுட் தந்த அம்பயர்:

பந்தை ஹர்மன்ப்ரீத் எடுத்து வீசுவதற்குள் எதிர்திசையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் டிவைன் மற்றொரு ரன்னுக்கு அழைத்தார். ஆனால், அமெலியா கெர் ஒரு ரன் ஓடி முடிப்பதற்குள் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை வீச, அதைப் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ரன் அவுட் செய்தார்.

அவுட் என்று தெரிந்ததும் அமெலியா கெர் பெவிலியன் நோக்கி நடந்தார். கள நடுவர்கள் மூன்றாவது அம்பயருக்குச் சென்றனர். இந்திய வீராங்கனைகள் இந்த விக்கெட்டை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், 3வது அம்பயர் இதை நாட் அவுட் என்று கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்களும், இந்திய வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்பயரின் முடிவுக்கு காரணம் என்ன?

3வது நடுவர் நாட் அவுட் கொடுத்ததற்கு காரணத்தையும் விளக்கமாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்திடம் களத்தில் இருந்த அம்பயர்கள் கூறினார்கள். அதாவது, கடைசி பந்தை வீசி முடித்த பிறகு தீப்தி ஷர்மா அம்பயரிடம் இருந்து தனது தொப்பியை வாங்கிவிட்டார். அப்போதுதான் அமெலியா கெர் இரண்டாவது ரன் எடுக்க ஓடினார். அதன்பின்பே, அவர் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஐ.சி.சி. விதிப்படி பந்துவீச்சாளர் தனது தொப்பியை அம்பயரிடம் இருந்து வாங்கிவிட்டால் அந்த ஓவர் முடிந்துவிட்டதாகவே கணக்கில் கொள்ளப்படும். அதன்பின்பு, இந்த ரன் அவுட் நடந்ததால் இதை ஐ.சி.சி. விதிப்படி நாட் அவுட் என 3வது அம்பயர் அறிவித்தார்.  மேலும், சர்ச்சைக்குரிய இந்த பந்தை டெட் பால் என்று நடுவர்கள் அறிவித்தனர். இதனால், அமெலியா கெர் எடுத்த ரன்னும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த அவுட் காரணமாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இந்திய பயிற்சியாளரும் அம்பயரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்து மறுவாய்ப்பு கிடைத்த அமெலியா கெர் அடுத்த ஓவரிலே அவுட்டானார். அமெலியா கெர் 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
Embed widget