T20 World Cup: உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா..? குறுக்கே வரும் கவுசிக்காக பாகிஸ்தான்?
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும், அரையிறுதி வாய்ப்பு பறிபோகவில்லை. ஆனால் இந்த தோல்வி தொடரின் எஞ்சிய போட்டிகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனை வென்றிருந்தால், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி குரூப் 2 இல் முதல் இடம் பிடித்து அரையிறுதியில் கால் பதித்திருக்கலாம்.
ஆனால் 152 ரன்கள் டார்கெட்டை எட்ட முடியாமல், இந்திய அணி தோற்றதால் இங்கிலாந்து அணி அந்த இடத்தில் சாவகாசமாக அமர்ந்துள்ளது. ஆனாலும், தரவரிசையின் அடிப்படையில், இந்தியா இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா அரையிறுதிக்கு வருவதற்கு என்ன தேவை
ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தானுடன் மோதும்போது இந்தியா அந்த போட்டியை உன்னிப்பாகக் கவனிக்கும். இரண்டு அணிகளும் தற்போது இந்தியாவை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கி உள்ளன, ஆனால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஒரு போட்டியே எஞ்சியுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மிஞ்சி உள்ளன. அதுமட்டுமின்றி ரன் ரேட்டிலும் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் மே.தீவுகளை வென்றால்?
அந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அடுத்ததாக நடக்கும் இங்கிலாந்து போட்டியை கவனிக்க வேண்டும். அதில் அவர்கள் தோற்று, இந்தியா அயர்லாந்தை வென்றால் இந்திய அணிக்கு வாய்ப்பு உண்டு.
இரண்டிலும் பாகிஸ்தான் வென்றால்?
இரண்டு போட்டியிலும் வென்றால், இந்தியா தனது கடைசி போட்டியை (அயர்லாந்துடன்) வென்றாலும் அறையிறுதிக்கு முன்னேற முடியாது. எனவே பாகிஸ்தான் அணி இரண்டில் ஒன்றை தோற்று இந்திய அணி அயர்லாந்தை வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இரண்டையும் பாகிஸ்தான் வென்றால் அவர்கள் தானாக அறையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
இந்தியா இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டிய ஒன்று, அதன் தகுதி வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டு பாகிஸ்தான் தோற்கிறதா என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தான் தோற்றால் அரையிறுதி உறுதியா?
இந்த சூழ்நிலையில் இந்தியா அயர்லாந்திடம் தோற்றாலே ஒழிய இந்தியாவிற்கு கிட்டத்தட்ட வாய்ப்பு உறுதிதான். ஆனால் இந்தியா அயர்லாந்திடம் தோற்றால், இங்கிலாந்து அணி பாகிஸ்தானை ஒரு பெரிய வெற்றி பெற வேண்டிய சூழல் வரும்.
இந்தியா குழுவில் முதலிடம் பெற முடியுமா?
இந்தியா இன்னும் கோட்பாட்டளவில் குழு வெற்றியாளர்களாக அரையிறுதிக்கு தகுதி பெறலாம், ஆனால் அதற்கு ரன் ரேட் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். இந்தியா இப்போது அயர்லாந்தை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், மேலும் இங்கிலாந்து பாகிஸ்தானிடம் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில்தான் நெட் ரன்ரேட் சமன்பாடு இந்தியாவுக்குச் சாதகமாக மாறும்.
இரண்டாவது இடத்தில் இருந்தால் என்ன பிரச்சனை?
முதல் இரண்டு இடங்களைப் பெறுவது என்பது அரையிறுதியில் இடம் பெறுவதைக் குறிக்கிறது, எனவே, இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இந்தியாவுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் இந்தியா முதல் இடத்தை பிடிக்க விரும்பியதற்கு ஒரு நடைமுறைக் காரணமும் உள்ளது. குரூப் 2ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் அரையிறுதியில் குரூப் ஒன்றில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவார். மேலும் ஆஸ்திரேலிய அணி, குறைந்தபட்சம் இறுதிப் போட்டி வரையாவது தவிர்க்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு பலமான அணி ஆகும்.
ஆஸி., மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்று உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 இல் கடைசிப் போட்டியை வென்றதிலிருந்து, ஆஸ்திரேலியா 22 போட்டிகளில் வென்றுள்ளது, மேலும் ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அவர்களுடன் தோல்வியடைந்தது முதல், டிசம்பரில் சொந்த மண்ணில் T20I தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளை வென்றது, ஐந்தாவது ஆட்டம் டையில் முடிந்தது. எனவே ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வென்றால் அது இருதிப்போட்டியை விட பெரியதாக இருக்கும்.