Watch Video: அவுட்டா? இல்லையா? சர்ச்சைக்குள்ளான விராட் கோலி விக்கெட்! நடுவரை விளாசும் ரசிகர்கள்!
Virat Kohli : விராட் கோலி அவுட்டா ? இல்லையா? ட்ரெஸ்ஸிங் ரூமில் எரிச்சலுடன் உரையாடிய விராட் கோலியின் வீடியோ வைரலானது.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி பெவிலியன் திரும்பியது சர்ச்சைக்குள்ளானது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் அமைத்தாலும் தராகுல் 17 ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 32 ரன்களிலும் நாதன் லயன் சுழலில் சிக்கினார்கள். தன்னுடைய 100-வது போட்டியில் களமிறங்கிய புஜாராவை டக் அவுட்டாக்கிய நாதன் லயன் ஸ்ரேயாஸ் ஐயர் கேஎஸ் பரத் 6 என 2 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார். 66/4 என நிலையில், விராட் கோலியுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். அப்போது விராட் கோலி பெவிலியன் திரும்பினார். அவர் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தும் அவுட் கொடுக்கப்பட்டது ரசிர்கர்களிடையே பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.
Kohli looked angry after being given out by the third umpire.#INDvAUS #ViratKohli𓃵 #Umpire pic.twitter.com/AiE8gbcDkd
— Akhil Gupta 🏏 (@Guptastats92) February 18, 2023
ஆனால் மேத்தியூ குனேமான் வீசிய பந்தில் விராட் கோலி டிஃபண்ட் செய்தார். ஆஸ்திரேலியா அணியினர் எல்.பி.டபிள்யு. முறையில் அவுட் கேட்ட போது இந்தியாவைச் சேர்ந்த நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுத்தார். ஆனால், ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவ்யூ கேட்டார்.
மூன்றாவது நடுவரின் வீடியோ காட்சியில், பந்து ஒரே நேரத்தில் பேட்டையும் காலில் உள்ள பேடையும் உரசுவது போல் தெரிந்ததால் அம்பயர்களும் ரசிகர்களும் குழப்பமடைந்தனர். ஆனால், மூன்றாவது நடுவரும் அவுட் என்று அறிவித்தனர்.
That wasn't out to me. Too much doubt in there. #INDvAUS #ViratKohli pic.twitter.com/wrYGg1e1nT
— Wasim Jaffer (@WasimJaffer14) February 18, 2023
இதற்கு விராட் கோலியும் எதிர்ப்பு தெரிவித்து நடுவருடன் உரையாடினார். பெவிலியன் திரும்பிய போதும், விராட் கோலி தனது எரிச்சலை வெளிப்படுத்தினார்.
இதைப் பார்த்த ரசிர்கர்கள் சமூக வலைதளங்களில் விதிமுறைப்படி இல்லாமல் நடந்துகொள்வதை வன்மையாக கண்டித்தனர். பல்வேறு கமெண்ட்களுடன் விராட் கோலி அவுட் இல்லை என்பதை கமெண்ட் செய்து அந்த வீடியோவை பகிர்ந்தனர்.
ICC Clause 36.2.2.:
சர்வதேச ஐசிசியின் கிளாஸ் 36.2.2 என்ற விதிமுறை அதிகம் பேசப்பட்டது. அதாவது பந்து வீரரின் பேட்டிலும் - பேடிலும் ஒரே நேரத்தில் பட்டது போல தெரிந்தால், அதை பேட்டில் பட்டதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளதால்,விராட் கோலி நாட்-அவுட்தான். நடுவர்கள் விதிகளை படித்திவிட்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் ரவுண்டப்:
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை டேவிட் வார்னர் மற்றும் ஹவாஜா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் நிதானமாக ஆடிவந்த நிலையில், அணியின் ஸ்கோர் 50 ரன்களாக இருந்தபோது, டேவிட் வார்னர், 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து, 263 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. அக்ஷர் படேல் 74 ரன் எடுத்து அவுட் ஆனார்.
இரண்டாவது இன்னிங்ஸ்:
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் ஹெட், ஹவாஜா களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் எழுத்து 62 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.