T20 World Cup 2024: இந்திய அணியின் அடுத்த போட்டி..எங்கே ? எப்போது? முழு விவரம் உள்ளே!
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி விளையாடும் அடுத்த போட்டி குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டி20 உலகக் கோப்பை 2024:
ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முன்னதாகவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேபோல், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி விளையாடும் அடுத்த போட்டி குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
அடுத்த போட்டி எப்போது?
கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இச்சூழலில் தங்களது அடுத்த போட்டியை கனடா அணிக்கு எதிராக விளையாட உள்ளது இந்திய அணி. இந்த போட்டி ஜூன் 15 ஆம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது.
இந்தியா தனது அடுத்த போட்டியை எங்கு விளையாடவுள்ளது?
கனடாவுக்கு எதிரான இந்தியாவின் அடுத்த டி20 உலகக் கோப்பை 2024 போட்டி புளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா vs கனடா டி20 உலகக் கோப்பை 2024 போட்டி, சனிக்கிழமை (ஜூன் 15) இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்க உள்ளது. இந்த போட்டியை ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் நேரலையாக பார்க்கலாம்.
கனடா அணிக்கு எதிரான இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதேநேரன் இந்திய அணியின் வீரர்களான யஜஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
மேலும் படிக்க: ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை
மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்