உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து என்றால் என்ன? என்ன செய்யும்? யாருக்கு சாதகம்?
டியூக்ஸ் ஊழியர்களில் சிலர் நான்காவது தலைமுறை கிரிக்கெட்-பால் தையல் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவை 8 13/16 முதல் 9 அங்குல சுற்றளவு, 156 முதல் 163 கிராம் வரை எடையும் இருக்க வேண்டும்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மற்றொரு சீசன் பெரும் ஆரவாரத்துடன் முடிந்த அடுத்த வாரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் திரும்பியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 7 முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை ஐந்து நாள் டெஸ்ட் போட்டியாக நடைபெறும்.
டியூக்ஸ் பந்து
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக கூகபுரா பந்து தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும். அந்த பந்து மெஷினில் தைக்கப்பட்டு தயாராகும் பந்தாகும். ஆனால் இந்த டியூக்ஸ் பந்து கைகளால் தைக்கபட்டு தயாராகும் பாந்தாகும்.
பசுத்தோலில் செய்யப்படும் பந்து
ட்யூக்ஸை உற்பத்தி செய்வதற்கு பசுவின் தோலை உபயோகப் படுத்துகின்றனர். மேலும் சிறந்த தோல் வேண்டும் என்பதற்காக, அபெர்டீன் அங்கஸ் எனப்படும், ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் நாடுகளின் செழிப்பான மாடுகளிடமிருந்து அவை வருகின்றன. தோல்கள் செஸ்டர்ஃபீல்டில் உள்ள ஸ்பைர் லெதருக்கு அனுப்பப்படுகின்றன, அங்கு அவை சுத்தம் செய்யப்பட்டு, தோல் பதனிடுதல் செயல்முறைக்கு உதவ அலுமினிய சல்பேட்டுடன் ட்ரீட் செய்யபட்டு, விரும்பிய வண்ணம் தெளிக்கப்பட்டு, வெட்டப்படுகின்றன. அந்த உலர்ந்த தோல்களின் தடிமன் அளவிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. முதுகெலும்பைச் சுற்றியுள்ள பருமனான பகுதிகள் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளுக்காக சேமிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் வெளிப்புற பக்கவாட்டு தோல்கள் குறைந்த தர கிரிக்கெட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
எப்படி செய்யப்படுகிறது?
வெட்டப்பட்ட தோல்கள் துணைக் கண்டத்திற்கு அனுப்பப்பட்டு மூன்று மாதங்கள் உருவாக்கப்படுகின்றன, பின்னர் அவை வால்தம்ஸ்டோவுக்குச் செல்கின்றன. அங்கு அவை அரை-பந்து கோப்பைகளாக தைக்கப்படுகின்றன. அவை ஒரு கார்க் மற்றும் ரப்பர் மையத்தைச் சுற்றி ஒன்றாக தைக்கப்படுகின்றன. தையல்களின் நடுவில் இரண்டு வரிசைகள் மடிப்புகளை உருவாக்குகின்றன. இந்த பந்து மொத்தம் 80 தையல்களால் ஆனது. இந்த பந்தை செய்ய அதிக நேரம் ஆகும், ஒரு நபர் ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு பந்துகளை மட்டுமே செய்ய முடியும். இது உணர்வு, பொறுமையுடன் கூர்ந்து கவனித்து செய்ய வேண்டிய வேலை என்று கூறுகின்றனர். இதை செய்பவர்கள் பல நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர், அதில் பலர் தங்களது பெற்றோரிடம் இருந்து அவற்றை கற்று வைத்துள்ளனர். டியூக்ஸ் ஊழியர்களில் சிலர் மூன்றாம் அல்லது நான்காவது தலைமுறை கிரிக்கெட்-பால் தையல் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துகள் 8 13/16 முதல் 9 அங்குல சுற்றளவு மற்றும் 156 கிராம் முதல் 163 கிராம் வரை எடையும் இருக்க வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்கப்படுகின்றனர். ஒரு தங்க நிற முத்திரை அவற்றின் தரத்தைக் குறிக்கிறது.
இந்த பந்து யாருக்கு சாதகம்?
இந்த பந்தை பயன்படுத்தும் முடிவு இரு அணிகளுக்கும் கூடுதல் சவால்தான், ஏனென்றால் டியூக்ஸ் பந்து ஸ்விங்கிற்கு பெயர் பெற்றது. கையால் தைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதில் ஸ்விங் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களை இன்னும் அதிகமாக சோதிக்கும். சுவிங்கிற்கு பெயர்பெற்ற இந்த பந்தில் ரன் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சிரமமான காரியமாக இருக்கும். இதனால ஸ்விங் பவுலர்கள் இந்த பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு சுழற்பந்து வீச்சாளரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், டியூக்ஸின் பாதகங்கள், சாதகத்தை விட அதிகமாக இருக்கும். ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மர்ஃபி போன்றவர்கள் இறுதிப்போட்டி மோதலில் ஏராளமான டிரிஃப்ட் மற்றும் டாப்ஸ்பின் ஆகியவற்றைப் பெற முடியும். ஆனால் ஸ்பின் ஸ்பின் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஷர் படேல் ஐபிஎல் தொடரின்போதே தாங்கள் டியூக்ஸ் பந்தை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.