IND vs WI: ரோகித், விராட் இல்லை.. ப்ளேயிங் லெவனில் சஞ்சு.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா..?
வெஸ்ட் இண்டீஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
நேற்று முன் தினம் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. 25 ஓவர்கள்கூட தாக்குப்பிடிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது.
இந்தியா பேட்டிங்:
ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, ஒருநாள் தொடரை வெல்ல அடுத்துள்ள இரண்டு போட்டியிலும் வென்றாகவேண்டும். அதாவது இன்று நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வென்றால்தான் ஒருநாள் தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது.
பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்
முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படாததற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்த போட்டியில் களமிறங்கவில்லை. அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்
இந்தியா பிளேயிங் லெவன்:
ஷுப்மான் கில், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்