WBBL 2021: மகளிர் பிக் பாஷ் தொடரில் 'மாஸ்' கிளப்பிய ஹர்மன்ப்ரீத் கவுர்... சிறந்த வீராங்கனையாக தேர்வு...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்மகளிர் பிக் பாஷ் தொடரில் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வாகியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிக் பாஷ் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணியினரை சேர்ந்த 8 பெண்கள் விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடியுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக மீதமுள்ள ஆறு இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அணியின் விவரம்- இந்திய வீராங்கனை :
சிட்னி தண்டர் - ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா
சிட்னி சிக்ஸர்ஸ் - ஷாபாலி சர்மா, ராதா யாதவ்
மெல்போர்ன் ரினகேட்ஸ் - ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஹேபர்ட்ஸ் ஹரிகேன்ஸ்- ரிச்சா கோஷ்
பிரிஸ்பேன்ஸ் ஹீட்- பூனம் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
🚨 Harmanpreet Kaur is WBBL’s Player of the Tournament 🚨
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 24, 2021
She is the first Indian to win the award.
இந்தநிலையில், மெல்போர்ன் ரினகேட்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 399 ரன்கள் மற்றும் 15 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும், மெல்போர்ன் ரினகேட்ஸ் அணியின் அதிக ரன் மற்றும் அதிக விக்கெட்களையும் எடுத்தவர் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலிடத்தில் உள்ளார்.
இதையடுத்து, பிக் பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய டி 20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார். இந்த பட்டம் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவரை சேர்ந்துள்ளது.
🚨 Harmanpreet Kaur is WBBL’s Player of the Tournament 🚨
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 24, 2021
She is the first Indian to win the award.
தற்போது, மெல்போர்ன் ரினகேட்ஸ் அணி நாக் - அவுட் சுற்றுகளில் விளையாடி வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றால் வருகிற 27 ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்