(Source: ECI/ABP News/ABP Majha)
Warner-Sehwag: வார்னர் டெஸ்ட்டில் சாதிப்பார் என்று சொன்னபோது சிரித்தார்... மனம் திறந்த சேவாக் !
வார்னர் டெஸ்ட் செயல்பாடு தொடர்பாக 2009ஆம் ஆண்டே அவரிடம் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இம்முறை மீண்டும் டெல்லி அணியில் களமிறங்கி டேவிட் வார்னர் அசத்தி வருகிறார். நடப்பு தொடரில் அவர் 6 போட்டிகளில் 261 ரன்கள் விளாசியுள்ளார். இந்தச் சூழலில் டேவிட் வார்னர் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கிரிக்கெட் தளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “2009ஆம் ஆண்டு டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக விளையாட வந்தார். அப்போது அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வில்லை முதல் தர கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி இருந்தார். அவருடைய ஆட்டத்தை பார்த்து நான் நீங்கள் டி20 மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவீர்கள் என்று கூறினேன்.
Davey = Consistency 💙#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvKKR#TATAIPL | #IPL | #DelhiCapitals | @davidwarner31 pic.twitter.com/Sk4fYVJTnr
— Delhi Capitals (@DelhiCapitals) April 28, 2022
அதற்கு வார்னர், “என்ன ஜோக் அடிக்கிறீர்களா” என்று கேட்டார். அப்போது டி20 போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே பவர்ப்ளே இருக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் முழுவதும் பவர்ப்ளே தான். ஆகவே நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ரன்கள் அடிக்கலாம் என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் டி20,ஒருநாள் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். தற்போது வரை வார்னர் ஆஸ்திரேலியாவில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7753 ரன்கள் விளாசியுள்ளார். டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்பதை வீரேந்திர சேவாக் 2009ஆம் ஆண்டே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளா டேவிட் வார்னர் பிருத்வி ஷாவுடன் சேர்ந்து அதிரடி துவக்கத்தை அளித்து வருகிறார். அவருடைய அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்