Mankad Rule: இனிமேல் நீங்கள் ப்ளான் போடலாம்... அஷ்வினை பாராட்டிய சேவாக் ..
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரவிச்சந்திரன் அஷ்வினை பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரவிச்சந்திரன் அஷ்வினை பாராட்டியுள்ளார்.
எம்சிசி கிரிக்கெட் விதிகளில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பவுலிங் செய்வதற்கு முன்பாக எல்லை கோட்டிற்கு வெளியே ஆட்டக்காரர் செல்லும் போது ரன் அவுட் செய்வதற்கு மன்கட் என்ற பெயர் இருந்து வருகிறது. இது ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் பட்லரின் விக்கெட்டை மன்கட் முறையில் எடுத்தப் பிறகு மீண்டும் பேசுப் பொருளாக மாறியது.
இந்நிலையில் இந்த மன்கட் முறையை இனிமேல் ரன் அவுட் முறையுடன் சேர்க்க எம்சிசி மாற்றம் செய்துள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் அப்படி பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்தால் அதற்கு ரன் அவுட் என்றே குறிப்பிடப்படும்.
Congratulations @ashwinravi99, great week this one. First becoming second highest wicket taker in Tests for India, and now this. Ab full freedom to plot such run-outs with Buttler.
— Virender Sehwag (@virendersehwag) March 9, 2022
Ek karna zaroor 😊 https://t.co/oCjfYdr6nr
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “அஷ்வினிற்கு இந்த வாரம் ஒரு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. அதற்கு என்னுடைய பாராட்டுகள். முதலில் இந்திய சார்பில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இணைந்தார். அதற்கு பின்பு இந்த மன்கட் முறை மாற்றம். இனிமேல் நீங்கள் பட்லருடன் சேர்ந்து இதுபோன்ற ரன் அவுட்களை செய்ய முழு சுதந்திரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விதியுடன் சேர்த்து மேலும் பல விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பந்துவீசும் போது யாரும் எச்சில் தொட்டு பந்தை சுத்தம் செய்ய கூடாது. தற்போது கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் கிரிக்கெட் விளையாட்டில் இதை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வீரர் கேட்ச் முறையில் ஆட்டமிழக்கும் போது புதிதாக களமிறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக வீரர்கள் இடம் மாறியிருந்தாலும் இனிமேல் புதிதாக வரும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். இந்தப் புதிய விதிகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்