Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதல் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் நின்றார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
வைரல் வீடியோ:
இச்சூழலில் தான் நேற்றைய போட்டியின் போது விராட் கோலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது 18 வது ஓவரை அக்ஷர் படேல் வீசினார். அந்த ஓவரில் ரிஷாத் ஹூசைன் அடித்த சிக்ஸர் எல்லைக்கோட்டிற்கு வெளியில் வைத்திருந்த கூடாரத்துக்குள் பந்து சென்றது. அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து வந்துள்ளார்.
Virat Kohli 🐐 finding the ball.
— 𐌑ⲅ Ꭺɴɪsʜ¹⁸ (@Number18only) June 22, 2024
- Gully cricket vibes. 😂❤️ pic.twitter.com/gPNi3bTsUr
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனைப்பார்த்த ரசிகர்கள் நாம் கிரிக்கெட் விளையாடும் போது பந்து இது போன்ற ஏதாவது இடத்தில் சென்றால் இப்படித்தான் உள்ளே நுழைந்து எடுப்போம். அதைப்போலவே விராட் கோலியும் செய்திருக்கிறார் என்று நகைச்சுவையான கமெண்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
மேலும் படிக்க: AFG vs AUS: பழிக்குப் பழி..! அன்று தவறவிட்ட கேட்ச்சை இன்று பிடித்து அசத்திய நூர் - மேக்ஸ்வெல் ஷாக்