Watch Video: மைதானத்தின் நடுவே திடீரென ’காந்தாரா’வாக மாறிய கோலி.. குலுங்கி குலுங்கி சிரித்த கில், இஷான்.!
போட்டிக்கு நடுவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இளம் வீரர்களான கில் மற்றும் இஷான் கிஷனுக்கு இடையே மைதானத்தில் செய்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்படியான போட்டிக்கு நடுவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இளம் வீரர்களான கில் மற்றும் இஷான் கிஷனுக்கு இடையே மைதானத்தில் செய்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கோலி கொடுத்த ரியாக்ஷன்தான் ஹைலைட்டே!
வைரல் வீடியோ:
இஷான் கிஷானுக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையில் விராட் கோலி நிற்பது போன்ற வீடியோ வெளியானது. அப்போது நடுவே இருந்த கோலி முதலில் கில் பக்கம் திரும்பி ‘காந்தாரா’ படத்தின் கிளைமேக்ஸில் ஹீரோ தனது முகத்தை திருப்பிகொண்டு சிரிப்பது போல் செய்கிறார். தொடர்ந்து, இஷான் கிஷன் பக்கமும் திரும்பி அதேபோல் ரியாக்ஷன் கொடுக்கிறார். முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த கில் மற்றும் இஷான் கிஷன், அதை பார்த்துவிட்டு குலுங்கி குலுங்கி சிரித்தது. இந்த சம்பவமானது வெஸ்ட் இண்டீஸின் இரண்டாவது இன்னிங்ஸின்போது நடந்தது.
Cutesttt babbyy❤️❤️#ViratKohli pic.twitter.com/Tt7ABL9AmG
— bindu (@binduuu_) July 15, 2023
சதத்தை தவறவிட்ட கோலி:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த விராட் கோலி, தனது 29வது டெஸ்ட் சதத்தை தவறவிட்டார். இந்த இன்னிங்ஸில் இவர் 5 பவுண்டரிகள் உதவியுடன் 76 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், சுப்மன் கில் 11 பந்துகளில் 6 ரன்களும், அறிமுக போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 1 ரன் எடுத்திருந்தார்.
இந்திய அணி அபார வெற்றி:
கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், பேட்டிங்கை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்டு 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதன்பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தினார். இது தவிர கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்குள் சுருண்டது. இதிலும், ரவிசந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காமித்தார்.