Virat Kohli Workout Video: தனி ஒருவனாய் உன் முன் படையெடுத்து... ஆசியக் கோப்பைக்கு வேற லெவலில் தயாராகும் கோலி!
ஆசியக் கோப்பைக்கு தயாராகும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினும் இடம்பெற்றுள்ளார்.
ஃபார்முக்காக போராடி வரும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வரவிருக்கும் ஆசியக் கோப்பை 2022 தொடரில் 41 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார். பலரும் இந்திய அணிக்குள் விராட் கோலி வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் ”விராட் கோலி அணிக்குள் இருப்பது பலம்தான். தொடக்க விக்கெட்கள் டக்கென்று சரிந்தால் கோலி சரிவில் இருந்து மீட்பார்” என்றும், மற்ற சிலர் ”சுத்தமாக பார்மில் இல்லாத ஒருவரை எப்படி அணியில் எடுக்கலாம், அதற்கு ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாமே” என்றும் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கு தயாராகும் விதமாக முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
முன்னதாக விராட் கோலி தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே ஐசிசியின் ரிவ்யூ நிகழ்ச்சியில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதன்படி, “விராட் கோலி தற்போது ஒரு மோசமான ஃபார்மை சந்தித்து வருகிறார். அவர் ஒரு சிறப்பான வீரர். இதுபோன்ற இகட்டான தருணங்களில் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் இதுபோன்று ஏற்கெனவே செய்துள்ளார். ஆகவே அதேபோன்று மீண்டும் வருவார். ஒரு வீரரின் ஃபார்ம் நிரந்தரமானதில்லை. ஆனால் அவருடைய கிளாஸ் எப்போதும் நிரந்தரமான ஒன்று. எனவே நிச்சயம் மீண்டு வருவார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்