Kohli Test Retirement:: ரோஹித்தை தொடரும் விராட் - டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா.? பிசிசிஐ கூறியது என்ன.?
Virat Kohli Test Retirement: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பிசிசிஐ என்ன கூறியது தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பிசிசிஐ கொடுத்த பதில் என்ன தெரியுமா.?
சாதனை மன்னன் விராட் கோலி
கிரிக்கெட் உலகில், கிங், ச்சேஸ் மாஸ்டர், ரன் மெஷின் என்றெல்லாம் அழைக்கப்படும் விராட் கோலி, கிரிக்கெட்டில் செய்த சாதனைகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்துள்ள 2-வது வீரராவார்.
சர்வதேச அளவிலும், ஒருநாள் கிரிக்கெட்டிலும், டி20 போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்த வீரர்களின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் கோலி. ஐபிஎல்லின் அதிக ரன்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார். மூன்று விதமான கிரிக்கெட் பேட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ள கோலி, அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதாவது, 3 விதங்களிலும், 68 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி, 40 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளார். 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 900 என்ற அதிக புள்ளிகளை பெற்றுள்ள ஒரே பேட்ஸ்மேன் கோலி தான்.
7 இரட்டை சதங்களை அடித்து, அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. 51 சதங்களுடன் உலகிலேயே அதிக சதமடித்த வீரராகவும், 22 சதங்களுடன் இந்தியாவிற்காக அதிக சதங்களை அடித்த வீரராகவும் திகழ்கிறார் கோலி. ச்சேஸிங்கில் மட்டுமே 28 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 2017-ல், 2818 ரன்களை குவித்து, இந்தியாவிற்காக 2023ஒரே ஆண்டில் அதிக ரன்களை எடுத்த வீரராகவும், 2023 உலகக்கோப்பையில் 765 ரன்களை குவித்து, ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்களை எடுத்த வீரராகவும் இருப்பவர் விராட் கோலிதான். அதிவேகமாக 8,000 ரன்கள் அடித்ததில் தொடங்கி, அதிவேகமாக 9, 10, 11, 12, 13, 14,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி.
டி20 போட்டிகளிலும் அதிக சராசரியை வைத்திருப்பவர் விராட் கோலி தான். டி20-ல் 3,000, 3,500, 4000 ரன்களை அதிவேகமாக குவித்த வீரரும் இவர்தான். இதேபோல், ஐபிஎல்-ல் அதிக ரன்கள், கேப்டனாக அதிக ரன்கள், ஒரே தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள்(8), அதிக அரை சதங்கள்(62) என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சாதனைகளை தன் வசமாக்கி வைத்துள்ளார் விராட் கோலி.
டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறு விருப்பம் தெரிவித்த கோலி - பிசிசிஐ பதில்
தற்போது நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கோலி, அடுத்த சில வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், கோலியின் முடிவை கேட்டு அதிர்ந்த பிசிசிஐ, கோலியிடம் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது 36 வயதாகும் கோலி, இன்னும் 2 ஆண்டுகளாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், ஏற்கனவே டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்டிலிருந்தும் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















