Virat Kohli: அரிதிலும் அரிது.. ஒரே நாளில் 4 கேட்சுகளை தவறவிட்ட கோலி.. கோபத்தில் ரசிகர்கள்!
இன்று ஒரே நாளில் மட்டும் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டார் என்று சொன்னால் எந்தவொரு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரும் நம்ப மாட்டார். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் பீல்டிங்கிலும் மிகப்பெரிய திறமைசாலி. அனைத்து பார்மேட்டிலும் இவரது பேட்டிங் மற்றும் பீல்டிங் ரணகளப்படுத்தும். மற்ற நாட்கள் எப்படியோ! இன்றைய நாள் விராட் கோலிக்கு நல்ல நாளாகவே இல்லை.
இன்று ஒரே நாளில் மட்டும் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டார் என்று சொன்னால் எந்தவொரு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரும் நம்ப மாட்டார். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாவது நாளில் விராட் கோலி 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். இதனால் கோபடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Seems @imVkohli had too much butter today during breakfast and he didn’t wash his hands properly after that. I mean how one can drop 5-6 catches alone? And if he is out best slip fielder, then god save us. #INDvsBAN @BCCI
— Prabodh Kumar Swain (@prabodhswain) December 24, 2022
Dropped 3 catches
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) December 24, 2022
Claimed a grounded catch
Why Virat Kohli acting like Pakistani fielders? 🤣
வங்கதேசம் அணி 2வது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத அதிகபட்ச இலக்கு ஆகும்.
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வங்கதேச அணியை சுமாரான ஸ்கோரில் கட்டுப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருந்தன, ஆனால் அது நடக்கவில்லை. அக்சர் படேலின் ஓவரின் போது இடதுபுறமாக பறந்து சென்ற கேட்சை முதலில் தவறவிட்ட கோலி முதல் ஸ்லிப்பில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை அவர் சிறிது இடதுபுறமாக நகரத் தொடங்க பந்து பண்ட் மற்றும் கோலிக்கு இடையில் சென்றது. இருவரையும் தாண்டி பந்து பவுண்டரிக்கு சென்றது. முதல் இரண்டு கேட்சுகள் லிட்டன் தாஸின் 44வது ஓவரின் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளில் நடந்தது.
सरेआम बेईमानी पर उतरे pic.twitter.com/wvojo3xPPS
— Adnan Ansari (@AdnanAn71861809) December 24, 2022
பின்னர், அவர் 10 ரன்களில் பேட்டிங் செய்யும் போது டாஸ்கின் அகமது பேட்டிங்கில் இருந்து வந்தது அதையும் விராட் கோல் தவறவிட்டார். இது 58வது ஓவரில் நடந்தது. இந்த தவறவிட்ட கேட்சுகளுக்கு இடையில், கோலி ஒரு கேட்சை எடுக்க முடிந்தது. ஆனால் அதுவும் தரையில் பட்டு கோலியின் கைகளில் தஞ்சமடைந்தது. இதன் மூலம் 52வது ஓவரின் கடைசி பந்தில் நூருல் ஹசன் தப்பித்தார்.