Virat Kohli bat : ”சிங்கம் என்றும் சிங்கம் தான்..” விராட் கோலியின் பேட்டுக்கு இவ்வளவு மதிப்பா?
Virat Kohli bat: ஆஸ்திரேலியாவில் அதிக விலைக்கு விலை போகும் விராட் கோலி பேட், யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியினுடைய புகழின் உச்சம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமின்றி கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் சந்தையிலும் உச்சத்தை பெற்று வருவது தற்போது கவனத்தை பெற்று வருகிறது.
விராட் கோலி பேட்:
ஆஸ்திரேலிய பாட்காஸ்டரும், யூடியூபருமான நார்மன் கோச்சநெக் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், கோலியின் MRF ஜீனியஸ் கிராண்ட் கிங் பேட்டின் விலை விலை உயர்த்தப்பட்டுள்ளது, இது கிரெக் சேப்பல் கிரிக்கெட் விற்பனையகத்தில் விற்கப்படும் இந்த பேட்டின் விலையானது 2,985 ஆஸ்திரேல்யன் டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பின் படி ரூபாய் 1.64 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோலியின் கையொப்பத்துடன் ஸ்டிக்கரில் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த பேட்டை, கிரிக்கெட் ஆர்வலர்களின் சேகரிப்புப் பொருளாக மாறியுள்ளது. இந்த பேட்டுக்கு என்று பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ள பையுடன் பேட்டானது விற்கப்பட்டு வருகிறது என்று யூடியூபர் நார்மன் கூறினார்.
View this post on Instagram
புகழ் இன்னும் குறையவில்லை:
மிகப்பெரிய விலைக்கு விராட் கோலியின் பேட்டானது விற்கப்பட்டு அவரது புகழின் உச்சம் உலகளாவில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு சவாலான கட்டத்தில் செல்லும்போது கூட அவரது புகழ் க குறையாமல் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான விளம்பரப் படங்களில் கூட அவரது முகம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது, அவர் இந்திய அணியை வழிநடத்தாவிட்டாலும் அவருக்கு ஆஸ்திரேலியாவில் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிங்க: IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்
ஆஸ்திரேலியாவில் கோலி:
விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் ரன் அடிப்பது என்பது அல்வா சாப்பிடுவது போல் இருக்கும். இதுவரை அங்கு 13 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதம் உட்பட மொத்தம் 1352 ரன்களை அடித்துள்ளார் விராட் கோலி. இருப்பினும் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் விராட் கோலி மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்ப ஆஸ்திரேலியாவை விட சிறந்த இடம் கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை.
பெர்த்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.