(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma: ரிட்டயர்மெண்ட் ப்ளேனைப் பகிர்ந்த ரோகித் சர்மா; பாராட்டிய சச்சின், தோனி - வைரலாகும் வீடியோ!
Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா தனது ரிட்டயர்மெண்ட் குறித்து சச்சின் மற்றும் தோனியுடன் பேசும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோகித் சர்மா. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரிலும் இறுதிப் போட்டிவரை சென்றது. ஆனால் இரண்டு வகை கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலக்கக்கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா தனது ரிட்டயர்மெண்ட் ப்ளான் குறித்து சச்சின் தெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனியிடம் பகிர்வதைப் போலவும் அதற்கு சச்சினும் தோனியும் தங்களது அறிவுரைகளைப் பகிர்வதைப் போலவும், மியூட்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மியூட்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனம் இதற்கு முன்னர் தனது விளம்பரங்களில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை பயன்படுத்தி வந்தது. அதாவது, இந்திய அணியின் மாஸ்டர் ப்ளாஸ்டர் எனப்படும் சச்சின் தெண்டுல்கர் மட்டும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவன விளம்பரத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பின்னர் சச்சின் தெண்டுல்கரும் தோனியும் டென்னிஸ் விளையாடிக் கொண்டு மியூட்சுவல் ஃபண்ட்ஸ் குறித்த விளம்பரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது வேகமாக பரவிவரும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் விளம்பர வீடியோவில், “ தோனி மற்றும் ரோகித் என இருவரும் ஒரு ரெஸ்டாரண்டில் உள்ளனர். அங்கு வரும் சச்சின் தெண்டுல்கர் அவர்களுடன் இணைந்து மியூட்சுவல் ஃபண்ட்ஸ் குறித்து பேசுகின்றார். அப்போது ரோகித் சர்மா தனது ரிட்டயர்மெண்ட் குறித்து பேசுகின்றார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோ விளம்பர நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் ரோகித் சர்மா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Hitman Rohit shares his retirement plans with Sachin Paaji & Mahi Bhai!
— Mutual Funds Sahi Hai (@MFSahiHai) May 21, 2024
If you're curious to know about his plan, watch the video.#MutualFunds #RetirementPlan #SIP #MutualFundsSahiHai@ImRo45 @msdhoni @sachin_rt pic.twitter.com/9VAquAVmaE
ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுவிட்டார், அதனால்தான் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவன விளம்பரத்தில் நடித்து தனது ரசிகர்களை மனதளவில் தயார் படுத்துகின்றார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.