Watch Video: "போடு ஆட்டம் போடு” உலகக் கோப்பையில் முதல் வெற்றி.. ஆட்டம் போட்ட உகாண்டா வீரர்கள்! வைரல் வீடியோ!
உலகக் கோப்பை டி 20 போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த உகாண்டா அணி வீரர்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
உலகக் கோப்பை டி20:
உலகக் கோப்பை டி20 போட்டிகள் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது. அதன்படி டி20 உலகக் கோப்பை ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 9 வது லீக் போட்டியில் பப்புவா நியூ கின்யா மற்றும் உகாண்டா அணிகள் மோதின.
முதல் வெற்றியை பதிவு செய்த உகாண்டா அணி:
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத்தொடர்ந்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த உகாண்டா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18. 2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.
அந்தவகையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பையில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அந்த அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்த வெற்றிக்கு பிறகு பேசிய உகாண்டா அணி கேப்டன் பிரையன் மசாபா,”உலகக் கோப்பை போட்டியில் முதல் வெற்றி பெறுவது எவ்வளவு சிறப்பானது என்பது உங்களுக்கே தெரியும்.
இதைவிட சிறப்பு வேறு இருக்காது. எனது அணியை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். அதாவது எங்கள் அணியினர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். அவர்கள் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்கள் நாட்டிற்கு ஒரு வெற்றியைப் பெறுவதற்காக உலகக் கோப்பை மிகவும் சிறப்பு வாய்ந்தது," என்று கூறினார்.
போடு ஆட்டம் போடு:
Uganda captain - Pretty special win for us, first win at the World Cup. Doesn't get more special than this. Super proud of this group of guys, put in the work, to get a win for their country at the World Cup is very special. It's been quite a journey, 3-4 years of very hard work… pic.twitter.com/VeBafCRVbb
— Nibraz Ramzan (@nibraz88cricket) June 6, 2024
இந்நிலையில் வெற்றிக்கொண்டாட்டத்தில் உகாண்டா அணி வீரர்கள் ஈடுபட்டனர். அதாவது தங்களது வெற்றியை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடனம் ஆடி கொண்டாடினார்க. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பையில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த உகாண்டா அணி வீரர்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற பதிவுகளையும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: Sunil Chhetri Last Match: கடைசி போட்டியில் களம் இறங்கும் கால்பந்து சிங்கம் சுனில் சேத்ரி! வெற்றிக் கனியை பறிக்குமா இந்திய அணி?
மேலும் படிக்க: T20 World Cup 2024: நோ பால் சம்பவம்.. ஸ்காட்லாந்துக்கு எதிராக திணறிய இங்கிலாந்து! பீதியடைந்ததாக ஒப்புக்கொண்ட மார்க் வுட்!