TNPL Playoff: டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி யார்? நெல்லை - திண்டுக்கல் இன்று மோதல்
டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி:
திருநெல்வேலியில் இன்று மாலை 7.15 மணிக்கு இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி தொடங்க உள்ளது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற திண்டுக்கல் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில், திண்டுக்கல் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடந்த போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. இதற்கு நெல்லை அணி பழிவாங்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், கோவை அணியை எதிர்கொள்ள உள்ளது.
அணியின் பலம் பலவினங்கள்:
திண்டுக்கல் அணியில் டாப்-ஆர்டர் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்த தொடரின் 3 போட்டிகள் அந்த அணியின் டாப்-ஆர்டர் வீரர்கள் சொதப்பியுள்ளனர். அதேநேரம், நடுகள வீரர்கள் யாரேனும் ஒருவர் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. போட்டி உள்ளூரில் நடப்பது நெல்லை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் பவர்பிளேயில் சிறப்பாக செயல்படும் அணியாக நெல்லை திகழ்கிறது. பொய்யாமொழி பந்துவீச்சில் எதிரணிக்கு சிம்மசொப்பமனமாக விளங்கி வருகிறார். மற்றவர்களும் அவருக்கு பக்கபலமாக செயல்பட வேண்டியுள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
திண்டுக்கல் டிராகன்ஸ்:
விமல் குமார், சிவம் சிங், பாபா இந்திரஜித், ஆதித்யா கணேஷ், பூபதி குமார், சுபோத் பதி, பி சரவண குமார், எம் மதிவண்ணன், வருண் சக்கரவர்த்தி, ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஜி கிஷூர்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், அஜிதேஷ் குருசுவாமி, ரித்திக் ஈஸ்வரன், நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ், பி சுகேந்திரன், என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர்
வெற்றி வாய்ப்பு யாருக்கு: திண்டுக்கல் டிராகன் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
டிஎன்பிஎல் தொடர்:
கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கிய நடப்பாண்டிற்கான டின்பிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 28 லீக் போட்டிகளின் முடிவில் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி, கோவை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி, நெல்லை அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.