மேலும் அறிய

TNPL 2023: இறுதிக்கட்டத்தை நெருங்கிய டிஎன்பிஎல்... தொடரில் இதுவரை நடந்த சிறந்தவை உங்களுக்காக..!

TNPL 2023 Highlights:இறுதிக்கட்டத்தை எட்டிய டின்.என்.பி.எல் லீக்கில் நடந்த நெகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பார்வைக்காக..

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டி 8 அணிகளை கொண்டு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவை, சேலம், திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய நான்கு இடங்களில் போட்டி நடைபெற்றது. நடந்து முடிந்த லீக் ஆட்டத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்தது கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை. அதேபோல் சேப்பாக், திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி அணிகள் கடைசி நான்கு இடங்களை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது.

தகுதி சுற்றின் கதை

இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழத்தி கோவை கிங்ஸ் முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. பின்னர் எலிமினேட்டர் சுற்றில் நெல்லை அணி மதுரை அணியை விழ்த்தி பிளே ஆப்ஸ் 2 சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆப் 1 சுற்றில் கோவையிடம் தோற்று வந்த திண்டுக்கலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக முன்னேறியது நெல்லை. நெல்லை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

நெகிழ்ச்சியான தருணங்கள்

1.மீண்டும் மீண்டுமா

டி.என்.பி.எல்  லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் சேலம் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணிக்கு 20 வது ஓவரை வீச வந்தார் அபிஷேக் தன்வார். முதல் 5 பந்துகளை துரிதமாக வீசிய அபிஷேக் ஆறாவது பந்தில் சஞ்சை யாதவை போல்ட் ஆக்கினார். ஆனால் அந்த பந்து நோ பால் என்று நடுவரால் கூறப்பட்டது. மறுபடியும் பந்தை வீச அதுவும் சிக்சருக்கு பறக்க மீண்டும் நோ பால் ஆனது. மீண்டும் பந்தை வீச சஞ்சை யாதவ் இரண்டு ரன்கள்  எடுக்க மீண்டும் நோ பால் ஆனது. மீண்டும் பந்தை வீச நடுவரால் அகலப்பந்து (வைய்டு) என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் அபிஷேக் தன்வார் பந்தை வீச அந்த பந்தையும் சிக்ஸராகினார் சஞ்சை யாதவ். அந்த கடைசி பந்தை அபிஷேக் தன்வார் ஐந்து முறை வீசினார் என்பதும் ஒரே பந்தில் 18 ரன்களை கொடுத்த ஒரே நபர் என்ற மோசமான பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் தன்வார்.

ரன் கொடுத்த விவரம் = (NB, NB(6), NB(2), WD, 6)

2.சும்மா அதிருதுல்ல

டி.என்.பி.எல் இறுதி போட்டிக்கான தகுதி சுற்று 2 இல் நெல்லை அணி திண்டுக்கல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  திண்டுக்கல் அணி 185 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெல்லை அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஓவரை திண்டுக்கல் அணி பந்துவீச்சாளர் கிஷோர் வீச, கீரிஸில் இருந்த ரித்திக் ஈஸ்வரன் வானவேடிக்கை காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்ததுடன் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். டி.என்.பி.எல்லிலேயே ஒரே ஓவரில் 33 ரன்கள் கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திண்டுக்கல் அணியை சேர்ந்த ரித்திக் ஈஸ்வரன் ஆனார். 

3.கோட்ட முழுசா அழிங்க முதல்ல இருந்து விளையாடலாம்

திண்டுக்கல்லில் நடந்த லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. 13 ஓவரை வீச வந்த திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி பந்தில் ராஜ் குமாரை வீழ்த்தினார். பின்னர் ராஜ் குமார் நடுவரிடம் ரிவ்யூவ் கேட்க மூன்றாவது நடுவர் நாட் அவுட் வழங்கினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கேப்டன் அஸ்வின் மீண்டும் ரிவ்யூவ் எடுத்தார். அதுவும் நாட் அவுட் என்றே கூறப்பட்டது. இதற்கு ’பேசாம பருத்தி மூட்ட குடோன்லையே இருந்திருக்கலாம்’ என்று மனதிற்குள் ரசிகர்கள் நினைக்க சோகத்தில் சென்றார் அஸ்வின்.

4.நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது

இந்த டி.என்.பி.ல் தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொண்டன. இதில் 7 அணிகள் மட்டுமே எதிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆனால் திருச்சி அணி மட்டும் அந்த பலப்பரீட்சைக்குள் செல்லவில்லை. பைபிலில் கூறுவதுபோல் ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பதை மனதில் வைத்து கொண்டு வரும் அணியிடம் அடிவாங்குவதே வேலையாக  வைத்திருந்தது திருச்சி. இந்த டி.என்.பி.எல் தொடரில் ஒரு முறை கூட வெற்றி பெறாத அணி என்ற பெருமையுடன் வீடு திருப்பியது திருச்சி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget