Tilak Varma: மாடர்ன் டே ரெய்னாவின் புது சாதனை.. தட்டித்தூக்கிய திலக் வர்மா
IND vs SA T20 : 10 அணிகளில் குறைந்த வயதில் (22 வயது 5 நாட்களில்) டி20 சதமடித்த வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக குறைந்த வயதில் டி20 சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் திலக் வர்மா படைத்துள்ளார்.
இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிர்க்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் மீண்டும் ஒரு முறை டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
திலக் அதிரடி:
மூன்றாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா, அபிஷேக் சர்மாவுட ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார்கள் ஒரு பக்கம் அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக அடிக்க, திலக் வர்மா அவருக்கு பக்கபலமாக ஆடினார். அபிஷேக் சர்மா கேசவ் மகராஜின் பந்து வீச்சில் ஸ்டாம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யா குமார் யாதவ் 1 ரன்னுக்கும் ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களில் வெளியேற, தனது பேட்டிங் கியாரை மாற்றினார் திலக் வர்மா, சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி 51 பந்துகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டாப் 10 அணிகளில் குறைந்த வயதில் (22 வயது 5 நாட்களில்) சதமடித்த வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அகமது ஷசாத் 22 வயதில் 127 நாட்களில் சதமடித்திருந்தார். அந்த சாதனை திலக் வர்மா தற்போது முறியடித்துள்ளார்.
Thunderstruck ❌
— JioCinema (@JioCinema) November 13, 2024
Tilak-struck 💯
A superb maiden century for the stylish #TeamIndia southpaw! 🙌
Catch LIVE action from the 3rd #SAvIND T20I on #JioCinema, #Sports18, and #ColorsCineplex! 👈#JioCinemaSports #TilakVarma pic.twitter.com/L7MEfEPyY8
ஒட்டுமொத்தமாக அதிவேகமாக டி 20 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். முதலாவது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளார் 21 வயது 279 நாட்களில் அடித்திருந்தார். திலக் வர்மாவின் அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 219/6 குவித்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டிகள் இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோராக இது அமைந்தது.
இந்தியாவுக்காக குறைந்த வயதில் சதம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் | 21 வயது 279 நாட்கள் |
திலக் வர்மா | 22 வயது 5 நாட்கள் |
சுப்மன் கில் | 23 வயது 146 நாட்கள் |
சுரேஷ் ரெய்னா | 23 வய்து 156 நாட்கள் |
இந்திய வெற்றி:
220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மார்க்கோ யான்சன் மட்டும் ஒரு முனையில் வெற்றிக்காக போராடினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது.