(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS 3rd ODI: 4 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தொடரை இழக்காத இந்திய அணி.. தாக்குதலை தொடுக்குமா ஆஸ்திரேலியா?
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (மார்ச் 22) ம் தேதி மோதுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (மார்ச் 22) ம் தேதி மோதுகின்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், ஒருநாள் தொடரை மட்டும் வெல்வது மட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையைப் பெறும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணி இந்தியாவில் விளையாடிய ஒரு ஒருநாள் தொடரை கூட இழந்ததில்லை. இதன் போது 8 ஒருநாள் தொடர்கள் விளையாடி அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் இந்த தொடரை தங்கள் சொந்த மைதானத்தில் முறியடிக்கும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவே ஆதிக்கம்:
கடந்த முறை 2019 மார்ச்சில் சொந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. அப்போது ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது. அந்த ஐந்து போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் டீம் இந்தியா வெற்றி பெற்றது, ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி வலுவான மறுபிரவேசம் செய்து மூன்று போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று தொடரில் இந்திய அணியை தோற்கடித்தது.
இந்திய அணி வெற்றி தொடரை தக்க வைக்குமா?
சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கைப்பற்றும் நம்பிக்கையில் இந்திய அணி உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலைமையில் உள்ளது. எனவே அது நிச்சயமாக தனது வெற்றி சாதனையை சொந்த மண்ணில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்திய அணியின் பெருமையை முறியடிக்குமா ஆஸ்திரேலியா?
கடந்த போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா மோசமாக வீழ்த்திய விதம் அவ்வணி வீரர்களுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் செம பார்மில் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் போட்டியின் நிலையையும் திசையையும் மாற்றக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் இந்த அணியில் நிறைந்துள்ளனர். மொத்தத்தில் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இந்தியா எந்த மாற்றமும் செய்யவில்லை
ஆஸ்திரேலிய அணி விவரம்:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), லாபுஷென், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, ஆடம் ஜம்பா, சீன் அபோட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க்.