மேலும் அறிய

Year Ender 2023: இந்தாண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி.. இத்தனை வெற்றிகள், பல்வேறு சாதனைகள்.. லிஸ்ட் இதோ!

Team India: நாளை (டிசம்பர் 26) தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு இந்த ஆண்டின் கடைசி சர்வதேசப் போட்டியாகும்.

நாளை (டிசம்பர் 26) தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு இந்த ஆண்டின் கடைசி சர்வதேசப் போட்டியாகும். மேலும், 2023-ம் ஆண்டில் இந்திய அணி விளையாடும் 66வது போட்டி இதுவாகும். இதற்கு முன் நடந்த 65 ஆட்டங்களில் இந்திய அணி 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 16 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும்,  இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் போனது. 

இந்திய அணி இந்தாண்டு டெஸ்ட் போட்டியில் எப்படி..? 

இந்த ஆண்டில் இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. அதில், ஐந்து ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவையும், இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டார். இந்த 7 போட்டிகளில் 3ல் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அதே சமயம் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. இதன்மூலம், 2023 ஆம் ஆண்டில் இந்திய அணியின் டெஸ்ட் சாதனை ஏற்றம் இறக்கம் இல்லாமல் உள்ளது. 

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி:

இந்த ஆண்டு இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து போட்டிகளிலும், இந்திய அணி 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. 

டி20யிலும் சிறப்பான ஆட்டம்:

இந்திய அணி இந்த ஆண்டு 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியது. இதில், இந்திய அணி 15ல் வெற்றி பெற்று 7ல் தோல்வியடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டியும் முடிவடையாமல் போனது. மொத்தத்தில், சராசரி அடிப்படையில் இந்திய அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

இரண்டு ஐசிசி இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்று ஏமாற்றம்: 

இந்த ஆண்டு இரண்டு ஐசிசி போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி களமிறங்கி தோல்வியை மட்டுமே சந்தித்தது. முதலாவதாக, கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மேலும், கடந்த நவம்பர் மாதம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. எனினும், இந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை மட்ட்டுமே சந்திக்க வேண்டியிருந்தது. இதன்மூலம் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 9 ஆண்டுகளைப் போலவே ஐசிசி கோப்பையை வெல்லும் கனவு இந்த ஆண்டும் கனவாகவே போனது. 

மேலும் சில சாதனைகள்.. 

  • இந்தியா இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 350+ ரன்களை 9 முறை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் இத்தனை கடந்தது இல்லை. முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 7 முறை 350+ ரன்களை எடுத்துள்ளது. 
  • 2023 ஆம் ஆண்டில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வெறும் 35 ஒருநாள் போட்டிகளில் 23.34 சராசரி மற்றும் 5.1 என்ற பொருளாதார வீதத்தில் 289 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இதன்மூலம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா சிறந்த ஒருநாள் பந்துவீச்சு ஆண்டாக இந்தாண்டு அமைந்தது.
  • இந்தாண்டு மொத்தமாக இந்திய அணி 250 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா 225 சிக்ஸர்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  • இந்தாண்டு இந்திய பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 49 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி தலா 44 மற்றும் 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget