Team India Victory Parade Highlights: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE Updates: இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை நேரலையாக பார்ப்போம்:

Background
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையிம் சாம்பியன் பட்டத்தை வென்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்திய அணியின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை வாழ்த்தினார்கள். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படேஸில் இருந்து இந்திய அணி இன்று (ஜூலை 4) நாடு திரும்பியது.
பிரதமருடன் சந்திப்பு:
அதன்படி, டெல்லி வந்தடைந்தனர் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாரட்டு விழா:
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் திரண்டுள்ளனர். 2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Team India Victory Parade LIVE: 125 கோடி பரிசு.. பிசிசிஐ வழங்கியது!
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை வழங்கியது பிசிசிஐ.
Team India Victory Parade LIVE: ரோகித் சர்மாவுக்கு ஸ்டாண்டிங் அவேஷன் கொடுத்த ரசிகர்கள்!
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்துள்ளது.
THE WHOLE STADIUM STANDING FOR ROHIT SHARMA 🇮🇳 pic.twitter.com/O2IUIjUaQS
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024




















