மேலும் அறிய

Team India Next Captain: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்...! ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்...! விரைவில் அறிவிப்பா...?

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை விட கே.எல்.ராகுலையே நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்தவர் விராட்கோலி. தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நேற்று திடீரென தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பால்  இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Team India Next Captain: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்...! ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்...! விரைவில் அறிவிப்பா...?

எந்தவொரு ஐ.சி.சி. கோப்பையையும் கோலி வென்று தராவிட்டாலும், இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாகவே கோலி வலம்வந்தார்.இந்த நிலையில், அவரது ராஜினாமா இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு வகிக்கும் நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த தொடரில் இடம்பெற்றிருந்த ரோகித்சர்மா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்தே விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுலிடம் ஒப்படைத்தனர். ரோகித்சர்மாவை கேப்டனாக நியமிக்க பலரும் விருப்பம் தெரிவித்தாலும், இந்திய அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், ரோகித்சர்மாவிற்கு அடிக்கடி ஏற்படும் காயம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Team India Next Captain: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்...! ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்...! விரைவில் அறிவிப்பா...?

விராட்கோலிக்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்சர்மாவிற்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் அவருக்கு தற்போது 34 வயதாகிவிட்டது. ஆனால், கே.எல்.ராகுலுக்கு தற்போதுதான் 29 வயதாகிறது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் கே.எல்.ராகுல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இதுமட்டுமின்றி, ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த அனுபவமும் கே.எல்.ராகுலுக்கு உண்டு.

ரோகித்சர்மா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகிய காரணத்தால், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹானேவை தற்போதுதான் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கீழே இறக்கியதாலும், புஜாராவிற்கும் 30 வயதிற்கு மேல் ஆகுவதாலும் இளம் வீரரையே கேப்டனாக நியமிக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது.

Team India Next Captain: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்...! ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்...! விரைவில் அறிவிப்பா...?

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி, பயிற்சியாளர் ராகுல்டிராவிட் உள்ளிட்ட பலரும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். 29 வயதே ஆன கே.எல்.ராகுல் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 547 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 7 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 199 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த பெருமையும் கே.எல்.ராகுலுக்கு உண்டு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget