மேலும் அறிய

T20 World cup: இங்கிலாந்தா…? ஆஸ்திரேலியாவா…? யாருக்கு இரண்டாமிடம்..? கௌசிக்காக குறுக்கே நிற்கும் அயர்லாந்து..!

உலககோப்பை டி20 தொடரில் மழை காரணமாக அரையிறுதிக்கு செல்லப் போகும் அணிகள் யார்? யார்? என்பதில் ரன்ரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முக்கியமான போட்டி மழையால் கைவிடப்பட்டதன் மூலம் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. இதன் மூலம் அவர்கள் இருவரும் அரையிறுதிக்குள் நுழைய, கடைசி இரண்டு போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டியவைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குரூப் 'ஏ':

இந்த குரூப் 'ஏ' வில் எல்லா அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 புள்ளிகளுடன், நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி ஆடிய மூன்றில் இரண்டு போட்டிகள் மழையால் தடைபட்டு, ஒரே ஒரு போட்டியையும் இழந்து இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசி அதற்கு முந்தைய இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இரு அணிகளும் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளன. முதல் இரண்டு இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பிடிக்க மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. ஆனால் இதில் ஆஸ்திரேலியா அடுத்ததாக விளையாட இருக்கும் அணிகள் அயர்லாந்தும், ஆப்கனிஸ்தானும். இரு அணிகளும் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய திறன் உள்ள அணிகள்தான், ஒரு வேளை அயர்லாந்து வென்றால் அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசிக்கும். அனைத்து அணிகளும் எப்படி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதை பார்க்கலாம்.

T20 World cup: இங்கிலாந்தா…? ஆஸ்திரேலியாவா…? யாருக்கு இரண்டாமிடம்..? கௌசிக்காக குறுக்கே நிற்கும் அயர்லாந்து..!

நியூசிலாந்து

மூன்று போட்டிகளில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே, குரூப் 1-ல் முதலிடம் வகிக்கும் அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். ஏனெனில் அவர்களது நெட் ரன் ரேட் அந்த அளவுக்கு பிரகாசமாக உள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாலும் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளும் அதே புள்ளிகளைதான் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் நியூசிலாந்து மற்றும் இலங்கையுடன் இருப்பதால், இரு அணிகளுமே பெரும் சவாலாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?

அயர்லாந்து

அயர்லாந்து தற்போது குரூப் 1ல் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்ல நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே முன்னேற முடியும்.

ஆஸ்திரேலியா

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது. அயர்லாந்தை விட பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலியா எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

இந்த மூன்று அணிகளுமே மற்ற இரண்டு அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோற்று இவர்கள் இரண்டையும் வென்றால் உடனடியாக தகுதி பெறும் வாய்ப்பு உண்டு.

T20 World cup: இங்கிலாந்தா…? ஆஸ்திரேலியாவா…? யாருக்கு இரண்டாமிடம்..? கௌசிக்காக குறுக்கே நிற்கும் அயர்லாந்து..!

இலங்கை

இலங்கை அணி மூன்று போட்டிகளில் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 6 புள்ளிகளை எட்டலாம். மறுபுறம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகியவை மீதமுள்ள இரண்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

ஆப்கானிஸ்தான்

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும். மேலும் மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே அந்த வாய்ப்பும் கிடைக்கும்.

குரூப் 1 இன் வரவிருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை:

அக்டோபர் 31 (திங்கட்கிழமை): ஆஸ்திரேலியா v அயர்லாந்து, தி கப்பா, பிரிஸ்பேன்

நவம்பர் 1 (செவ்வாய்): ஆப்கானிஸ்தான் v இலங்கை, தி கப்பா, பிரிஸ்பேன

நவம்பர் 1 (செவ்வாய்): இங்கிலாந்து v நியூசிலாந்து, தி கப்பா, பிரிஸ்பேன்

நவம்பர் 4 (வெள்ளிக்கிழமை): அயர்லாந்து v நியூசிலாந்து, அடிலெய்டு ஓவல்

நவம்பர் 4 (வெள்ளிக்கிழமை): ஆஸ்திரேலியா v ஆப்கானிஸ்தான், அடிலெய்டு ஓவல்

நவம்பர் 5 (சனிக்கிழமை): இலங்கை v இங்கிலாந்து, எஸ்சிஜி, சிட்னி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget