'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா' : ட்விட்டரில் வைரலாகும் கோலி-தோனி படம்..
இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகிய இருவரும் ஆலோசனை செய்யும் படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணிக்கு முதல் பயிற்சி போட்டி இங்கிலாந்து அணியுடன் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக உள்ளார். இந்நிலையில் இன்றைய பயிற்சி போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலியும் ஆலோசகர் தோனியும் ஆலோசனை செய்வது போன்ற படத்தை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Light-hearted conversations be like 😊 #TeamIndia #INDvENG #T20WorldCup
— BCCI (@BCCI) October 18, 2021
📸: Getty Images pic.twitter.com/m3cFu2KPOs
அந்தப் பதிவில் பிசிசிஐ, "மென்மையான ஆலோசனைகள் இப்படி தான் நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில் உள்ள படம் பதிவிடப்பட்டுள்ள சில நிமிடங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த இருவரையும் பார்க்கும் போது அப்படி ஒரு ஆனந்தம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
This duo.. 😍
— Cricket Fanatic🏏 (@cric8fanatic) October 18, 2021
Pic of the day 🤩💙 #Mentor #MentorDhoni pic.twitter.com/WeQHnkEW1Z
— 🌈 𝒥𝓊𝒿𝓊 ♡〽️SD🦁 (@Jxjx7x_x) October 18, 2021
King 👑 and god father
— hari Hara sudhan (@hariHar38876345) October 18, 2021
King and kohli in same frame
— Vivek (@beingkumarvivek) October 18, 2021
Captain with the mentor 🇮🇳@MSDhoni • #MSDhoni • #TeamIndia pic.twitter.com/SXj79w87iI
— Akash Cherry💙 (@CherryAakash) October 18, 2021
மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு பிறகு தோனி சென்னைக்கு வருவார்- ஶ்ரீனிவாசன் !