T20 WC 2024: அடுத்தடுத்து தோல்வி! சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேற முடியுமா? ஓர் அலசல்..
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து தோல்வி:
இதன்மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சுற்றில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் என்று கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் நேற்று தோற்றது மட்டுமின்றி, தொடக்கப் போட்டியில் அமெரிக்காவுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
அடுத்தடுத்து, தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளது. அடுத்தடுத்து தோல்வி அடைந்த பிறகும் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல சில விஷயங்கள் நடந்தால் மட்டுமே முடியும். அது எப்படி?
பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி 6 புள்ளிகளை எட்டக்கூடாது.
- அயர்லாந்து அணி அமெரிக்காவை வீழ்த்த வேண்டும்.
- பாகிஸ்தான் கனடா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
- அதாவது, பாகிஸ்தானின் ரன் ரேட்டானது இந்தியா மற்றும் அமெரிக்காவை காட்டிலும் சிறப்பாக இருக்கும் விதத்தில் வெற்றி பெற வேண்டும்.
- இந்திய அணியிடம் அமெரிக்கா தோற்க வேண்டும்.
ரன் ரேட் மிக மிக முக்கியம்:
பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் மிகுந்த சவாலாக மாறியுள்ளது. அவர்களின் ரன் ரேட்டானது மைனசில் உள்ளது. அவர்கள் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளை பிரம்மாண்ட ரன்ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தியாவின் ரன்ரேட் ப்ளஸ் 1.455 என்று உள்ளது. அமெரிக்காவின் ரன்ரேட்டும் ப்ளஸ் 0.626 ஆக உள்ளது. அமெரிக்க அணிக்கு இந்திய அணியுடனான போட்டி மிகுந்த சவாலாக இருக்கும். அதேசமயம், அயர்லாந்து அணியும் மிகுந்த சவாலான அணி என்பதால் அவர்களுடனும் வெற்றி பெற அமெரிக்கா கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு எப்படி?
கனடா, பாகிஸ்தான் அணியை தோற்கடித்த அமெரிக்கா அயர்லாந்து அணியை வீழ்த்தினாலே அவர்களது சூப்பர் 8 சுற்று வாய்ப்பு பிரகாசம் ஆகும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் சூப்பர் 8 சுற்று ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. கனடா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஒரு அணியை வீழ்த்தினாலே இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமாக அமையும். குரூப் ஏ சுற்றின் அடுத்தடுத்த போட்டிகள் மிகுந்த சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் மாறியுள்ளது.
மேலும் படிக்க: IND vs PAK Match Highlights: கடைசி நேரத்தில் கலக்கிய பும்ரா, அர்ஷ்தீப்.. பாகிஸ்தானை மீண்டும் உலகக் கோப்பையில் சரித்த இந்தியா..!
மேலும் படிக்க: T20 WC UGA vs WI: 39 ரன்களுக்கு ஆல் அவுட்! உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த உகாண்டா!