மேலும் அறிய

T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?

குரூப் ஏ பிரிவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், குரூப் பியில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

வரும் 27ம் தேதி நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 பிரிவின் குரூப் 1 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி சூப்பர் 8 குரூப் 1ல் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 

அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், குரூப் பியில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல்: 

2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வருகின்ற ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை இந்த ஸ்டேடியத்தில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2022ல் இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வி: 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2022 டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. கேப்டன் ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அப்போட்டியில் அசத்தியிருந்தார். இம்முறையும் பட்லர்தான் அணிக்காக ஓப்பனிங் செய்ய இருக்கிறார். எனவே, அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்வதால், இந்திய அணிக்கு வெற்றியை பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. 2022ம் ஆண்டு பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. 

மழைக்கு வாய்ப்பு..? 

ஜூன் 27ம் தேதி இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போடிக்கு ரிசர்வ் நாள் இல்லை. எனவே மழையால் போட்டி கைவிடப்பட்டால், சூப்பர் 8ல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 

அக்யூவெதரின் அறிக்கையின்படி, வருகின்ற ஜூன் 27ம் தேதி கயானாவில் மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்பு உள்ளது. எனவே ஜூன் 27 அன்று நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிக்கு கூடுதலாக 250 நிமிடங்கள் கொடுக்கப்படும். இந்த 250 நிமிடங்களில் கூட போட்டியை முடிக்கவில்லை என்றால், இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதேநேரத்தில், இங்கிலாந்து அணி 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget