![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 World Cup 2022: கெத்தா மாஸா.. T20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி...
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.
![T20 World Cup 2022: கெத்தா மாஸா.. T20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி... T20 World Cup 2022: Indian team leaves to Australia to participate in T20 World cup tournament T20 World Cup 2022: கெத்தா மாஸா.. T20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/a5cb1d813bba094303a3971c0473165d1665020068117224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று தொடங்க உள்ளது. முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் 4 அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் மோதும். சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இந்தச் சூழலில் இந்திய அணியின் முதல் போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய புறப்பட்டது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி சில பயிற்சி போட்டிகளில் விளையாடும் என்று கருதப்படுகிறது.
Picture perfect 📸
— BCCI (@BCCI) October 5, 2022
Let's do this #TeamIndia@cricketworldcup, here we come ✈️ pic.twitter.com/XX7cSg3Qno
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்பனையாகி விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உடனடியாக முழுவதும் விற்பனையாகி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)