மேலும் அறிய

T20 World Cup 2022: இனிதே தொடங்குகிறது சூப்பர் 12 சுற்று..! முதல் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மோதல்..!

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல் சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. ஏற்கனவே நடந்த முதல் சுற்று அடிப்படையில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாவே, அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி சுற்றில் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 

இந்த சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், குரூப் 2 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாவே, நெதர்லாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளனர். 

இருபிரிவுகளில் இருக்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும். 

இந்தநிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டி இன்றுடன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்று இரண்டாம் இடம் பெற்றது. 

இந்த இரண்டு தோல்விக்கு பழி வாங்கும் முயற்சியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிட்னியில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி 90% மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி ஒன்று ரத்து செய்யப்படலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய நேரப்படி இந்த போட்டி பகல் 12 மணிக்கு சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. இதுவரை ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி, அதில், 10 ல் ஆஸ்திரேலியாவும், 5 ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக காணலாம். 

கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

கணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி: டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன்/மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி,  டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன், இஷ் சோதி

அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. 

இதற்கு முன்பு டி20 போட்டிகளில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை சந்தித்து அதில் இரண்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. 

கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:  ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் குரான், கிறிஸ் வோக்ஸ் / டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான்,அடில் ரஷித், மார்க் வூட்

கணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி: ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், தர்விஷ் ரசூலி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீப் கான், ரசீப் கான், உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget