T20 cricket Youngest Century : டி20 கிரிக்கெட் போட்டியில் மிக இள வயதிலே சதம்..! சாதனை படைத்தது யார் தெரியுமா..?
டி20 கிரிக்கெட் போட்டியில் மிக இளவயதிலே சதமடித்து சாதனை படைத்த வீரர் என்ற அரிய சாதனையை பிரான்ஸ் வீரர் படைத்துள்ளார்.
உலககோப்பை டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய இரண்டு பிரிவுகளில் அணிகள் களமிறங்கி விளையாடுகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் பி பிரிவில் ஐரோப்பாவில் இருந்து பங்கேற்கும் இரு அணிகள் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் மத்தியில் தகுதிச் சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் நடைபெற்ற தகுதிப்போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தும், பிரான்சும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரான்ஸ் அணி முதலில் பேட் செய்தது. இதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக கஸ்டவ் மெக்கெய்ன் மற்றும் ஹேவித் ஜாக்சன் களமிறங்கினர்.
ஹேவித் ஜாக்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும், கஸ்டவ் மெக்கெய்ன் மட்டும் தனி ஆளாக போராடினார். அவரது அபார ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அபாரமாக ஆடிய மெக்கெய்ன் 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம், டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக இள வயதிலே சதமடித்து அசத்திய வீரர் என்ற புதிய சாதனையை மெக்கெய்ன் படைத்தார்.
மெக்கெய்னுக்கு தற்போது 18 வயதுகள் 280 நாட்கள் மட்டுமே பூர்த்தி அடைந்துள்ளது. இதற்கு முன்பு டி20 போட்டிகளில் சதமடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் ஹர்ஷதுல்லா ஷாசாய் 2019ம் ஆண்டு படைத்திருந்தார். அப்போது, அவருக்கு 20 வயது 337 நாட்கள் பூர்த்தியடைந்திருந்தது.
அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரான 157 ரன்களில் 109 ரன்களை தனி ஆளாக விளாசிய மெக்கெய்ன் மொத்தம் 5 பவுண்டரிகளையும், 9 சிக்ஸர்களையும் விளாசியதுடன், மிக இள வயதில் டி20யில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் பிரான்ஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மெக்கெய்ன் இத்தனை சாதனைகளை படைத்தும் இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க : Axar Patel Record: 17 ஆண்டுகால ரெக்கார்ட்..! தோனியின் சாதனையை முறியடித்த அக்ஷர் படேல்...!
மேலும் படிக்க : Century in 100th ODI match : 100-வது ஒருநாள் போட்டியில் 100 அடித்த ரோலக்ஸுகள் ... இந்தியாவிற்கு எதிராக மட்டும் இத்தனை வீரர்களா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்