மேலும் அறிய

Century in 100th ODI match : 100-வது ஒருநாள் போட்டியில் 100 அடித்த ரோலக்ஸுகள் ... இந்தியாவிற்கு எதிராக மட்டும் இத்தனை வீரர்களா..?

தங்களது 100 வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக இதுவரை 4 வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.

டிரினிடாட்டில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. 

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49. 4 பந்துகளில் 312 ரன்கள் குவித்து இந்த தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது.  35 பந்துகளில் ( 3 பெளண்டரி, 5 சிக்ஸர்கள்) 64 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அக்சார் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்றைய இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஷாய் ஹோப் தனது 100 வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதே 100 வது போட்டியில் தனது சதத்தையும் ஷாய் ஹோப் பதிவு செய்தார். இது 13வது சதம் ஆகும். ஒட்டுமொத்த அளவில் 100வது ஒருநாள் போட்டியில் ஆடி சதமடித்த 10வது வீரர், இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை ஷாய் ஹோப் படைத்தார். 

இந்த நிலையில், 100வது ஒருநாள் போட்டியில் சதமடித்த வீரர்கள் பட்டியலை கீழே காணலாம் :

  • கோர்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) vs பாகிஸ்தான் - 1998
  • ஜிஎல் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து) vs இந்தியா - 1999
  • யூசுப் யூஹானா (பாகிஸ்தான்) vs இலங்கை - 2000
  • குமார் சங்கக்கரா (இலங்கை) vs பாகிஸ்தான் - 2004
  • கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) vs இங்கிலாந்து - 2004
  • மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (இங்கிலாந்து) vs வங்காளதேசம் - 2005
  • ராம்நரேஷ் சர்வான் (வெஸ்ட் இண்டீஸ்) vs இந்தியா - 2006
  • டேவிட் வார்னர்  (ஆஸ்திரேலியா) vs இந்தியா - 2017
  • ஷிகர் தவான்  ( இந்தியா) vs தென்னாப்பிரிக்கா - 2018
  • ஷாய் ஹோப்  (வெஸ்ட் இண்டீஸ்) vs இந்தியா - 2022

அதேபோல், தங்களது 100 வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக இதுவரை 4 வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜிஎல் கெய்ர்ன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்நரேஷ் சர்வான், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் ஆகியோர் உள்ளனர். 

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் (WICB) ஷாய் ஹோப்க்கு 100 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்சியை லெஜண்டரி கிரிக்கெட் வீரரும், தற்போதைய தேர்வாளருமான சர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் வழங்கினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget